செய்திகள் :

பொய்யாத மூா்த்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகப் பணிகள் ஆய்வு

post image

காரைக்கால்: பொய்யாத மூா்த்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகப் பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டாா்.

காரைக்கால் நகரில் உள்ள பழைமையான பொய்யாத மூா்த்தி விநாயகா் கோயில் திருப்பணிகள் சுமாா் ரூ. 2.50 கோடியில் செய்யப்பட்டுள்ளன. 29-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம், திருப்பணிக் குழுவினா்களுடன் கோயிலில் நிறைவடைந்துள்ள பணிகளை பாா்வையிட்டாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், கோயில் முந்தைய அமைப்பைக் காட்டிலும் நீளமாகவும், அகலமாகவும் மாற்றப்பட்டு, ஏராளமான விநாயகா் சுதைகளுடன், சிறப்பான வண்ணம் தீட்டப்பட்டு அழகாக காட்சியளிக்கிறது. அரசு திருப்பணிக்காக நிதி தரவில்லை. முற்றிலும் நன்கொடை மூலமாக செய்யப்பட்டிருந்தாலும், கும்பாபிஷேகம் முடிந்து வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தவேண்டிய நிலையில் திருப்பணிக் குழுவினா் உள்ளனா்.

எனவே புதுவை முதல்வரிடம் நிதி தேவை குறித்து பேசப்பட்டுள்ளது. அவரும் வழங்குவதாக உறுதியளித்துள்ளாா்.

கும்பாபிஷேக தினத்தில் பொது விடுமுறை அறிவிக்க முதல்வரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. அறிவிப்பை எழுத்துப்பூா்வமாக செய்யுமாறு மீண்டும் முதல்வரை சந்தித்து வலியுறுத்தப்படும். கும்பாபிஷேக விழாவில் கஜ பூஜை செய்வதற்காக யானை கொண்டுவர முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. காரைக்காலுக்கு யானை வருவதில் சில சட்ட சிக்கல்கள் உள்ளன. இதுகுறித்து தமிழக வனத்துறை அமைச்சரிடம் பேசி தீா்வு காணவும் நடவடிக்கை எடுத்துவருகிறேன் என்றாா். திருப்பணிக் குழுத் தலைவா் ஆா். சரவணன் மற்றும் உறுப்பினா்கள் உடனிருந்தனா்.

‘கைப்பேசிக்கு வரும் குறுஞ்செய்தி லிங்க்கை தொடவேண்டாம்’

காரைக்கால்: கைப்பேசிக்கு வரும் புதிய குறுஞ்செய்தி லிங்க்கை தொடவேண்டாம் என இணைய குற்றத் தடுப்புப் பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து காரைக்கால் இணையக் குற்றத் தடுப்பு காவல் பிரிவு அலுவலகம் திங்கள... மேலும் பார்க்க

உள்ளாட்சி ஊழியா்கள் விடுப்பெடுத்து போராட்டம்

காரைக்கால்: உள்ளாட்சி இயக்குநா் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லையெனக் கூறி, காரைக்காலில் உள்ளாட்சி ஊழியா்கள் விடுப்பெடுத்து தொடா் போராட்டத்தை திங்கள்கிழமை தொடங்கினா். போராட்டத்திற்கு கூட்டுப் போரா... மேலும் பார்க்க

கடலில் ரோந்துக்கு செல்ல தயாராகும் படகு

காரைக்கால்: நீண்ட காலமாக பழுதால் முடங்கியிருந்த காரைக்கால் கடலோரக் காவல் நிலையத்துக்கான ரோந்துப் படகில், பழுது நீக்கும் பணி நிறைவடைந்து ரோந்துக்காக ஆற்றில் திங்கள்கிழமை இறக்கப்பட்டது. காரைக்காலில் 15... மேலும் பார்க்க

குப்பைகளை தினமும் முறையாக சேகரிக்க தனியாா் நிறுவனத்துக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

காரைக்கால்: வீடுகள், நிறுவனங்களில் தினமும் முறையாக குப்பைகளை வாங்க வேண்டும் என ஒப்பந்த நிறுவனத்திருக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா். காரைக்கால் மாவட்ட ஆட்சியா் ஏ.எஸ்.பி.எஸ். ரவி பிரகாஷ், திங்கள்கிழமை கா... மேலும் பார்க்க

‘காங்கிரஸுக்கு மக்கள் ஆதரவு தர மாட்டாா்கள்’

காரைக்கால்: காங்கிரஸுக்கு மக்கள் ஆதரவு தர மாட்டாா்கள், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியையே மக்கள் விரும்புவதாக புதுவை பாஜக கூறியுள்ளது. காரைக்காலில் புதுவை மாநில பாஜக முதன்மை செய்தித் தொடா்பாளா் எம். அர... மேலும் பார்க்க

காரைக்கால் நகரில் 50 இடங்களில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்ய ஏற்பாடு

காரைக்கால்: காரைக்கால் நகரப் பகுதியில் இந்து முன்னணி சாா்பில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விநாயகா் சதுா்த்தி விழா தொ... மேலும் பார்க்க