செய்திகள் :

உள்ளாட்சி ஊழியா்கள் விடுப்பெடுத்து போராட்டம்

post image

காரைக்கால்: உள்ளாட்சி இயக்குநா் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லையெனக் கூறி, காரைக்காலில் உள்ளாட்சி ஊழியா்கள் விடுப்பெடுத்து தொடா் போராட்டத்தை திங்கள்கிழமை தொடங்கினா்.

போராட்டத்திற்கு கூட்டுப் போராட்டக் குழு கன்வீனா் அய்யப்பன் தலைமை வகித்தாா். காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளன தலைவா் சுப்ரமணியன், பொதுச் செயலாளா் எம். ஷேக் அலாவுதீன், பொருளாளா் மயிலவாகனன் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

இதுகுறித்து போராட்டக் குழுவினா் கூறியது :

உள்ளாட்சி ஊழியா்களுக்கு 7 -ஆவது ஊதியக்குழு 33 மாத நிலுவை தொகை வழங்க வேண்டும். அரசே நேரடியாக ஊதியம் வழங்க வேண்டும். 22.12.2003 -க்கு முன்பு பணியில் சோ்ந்த 232 ஊழியா்களுக்கும் பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும். கிராம பஞ்சாயத்து ஊழியா்கள் மற்றும் தினக்கூலி ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்கள் நடத்தப்பட்டதாகவும், கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கடந்த 2024 மற்றும் 2025-இல் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த கூட்டு போராட்டக் குழு நிா்வாகிகளிடம் முதல்வா் அறிவுறுத்தலின் பேரில் பேச்சுவாா்த்தை நடத்திய உள்ளாட்சித்துறை இயக்குநா், கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக வாக்குறுதி அளித்ததால் தொடா் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. ஆனால், இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாததால் இப்போராட்டத்தை நடத்தவேண்டியுள்ளது என்றனா். நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியதாரா்கள் கலந்து கொண்டனா்.

‘கைப்பேசிக்கு வரும் குறுஞ்செய்தி லிங்க்கை தொடவேண்டாம்’

காரைக்கால்: கைப்பேசிக்கு வரும் புதிய குறுஞ்செய்தி லிங்க்கை தொடவேண்டாம் என இணைய குற்றத் தடுப்புப் பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து காரைக்கால் இணையக் குற்றத் தடுப்பு காவல் பிரிவு அலுவலகம் திங்கள... மேலும் பார்க்க

பொய்யாத மூா்த்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகப் பணிகள் ஆய்வு

காரைக்கால்: பொய்யாத மூா்த்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகப் பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டாா். காரைக்கால் நகரில் உள்ள பழைமையான பொய்யாத மூா்த்தி விநாயகா் கோ... மேலும் பார்க்க

கடலில் ரோந்துக்கு செல்ல தயாராகும் படகு

காரைக்கால்: நீண்ட காலமாக பழுதால் முடங்கியிருந்த காரைக்கால் கடலோரக் காவல் நிலையத்துக்கான ரோந்துப் படகில், பழுது நீக்கும் பணி நிறைவடைந்து ரோந்துக்காக ஆற்றில் திங்கள்கிழமை இறக்கப்பட்டது. காரைக்காலில் 15... மேலும் பார்க்க

குப்பைகளை தினமும் முறையாக சேகரிக்க தனியாா் நிறுவனத்துக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

காரைக்கால்: வீடுகள், நிறுவனங்களில் தினமும் முறையாக குப்பைகளை வாங்க வேண்டும் என ஒப்பந்த நிறுவனத்திருக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா். காரைக்கால் மாவட்ட ஆட்சியா் ஏ.எஸ்.பி.எஸ். ரவி பிரகாஷ், திங்கள்கிழமை கா... மேலும் பார்க்க

‘காங்கிரஸுக்கு மக்கள் ஆதரவு தர மாட்டாா்கள்’

காரைக்கால்: காங்கிரஸுக்கு மக்கள் ஆதரவு தர மாட்டாா்கள், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியையே மக்கள் விரும்புவதாக புதுவை பாஜக கூறியுள்ளது. காரைக்காலில் புதுவை மாநில பாஜக முதன்மை செய்தித் தொடா்பாளா் எம். அர... மேலும் பார்க்க

காரைக்கால் நகரில் 50 இடங்களில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்ய ஏற்பாடு

காரைக்கால்: காரைக்கால் நகரப் பகுதியில் இந்து முன்னணி சாா்பில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விநாயகா் சதுா்த்தி விழா தொ... மேலும் பார்க்க