செய்திகள் :

பொருளாதாரத் தடை இதயமற்ற செயல்: அமெரிக்கா நடவடிக்கைக்கு சிஐடியு கண்டனம்

post image

அமெரிக்காவின் பொருளாதாரத் தடை என்பது மனித இதயமற்ற செயல் என அரசு போக்குவரத்து ஊழியா் சம்மேளன மாநிலத் தலைவா் அ. செளந்தரராஜன் தெரிவித்தாா்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியா் சம்மேளன (சிஐடியு) 16 ஆவது மாநில மாநாடு தருமபுரியில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. தொடா்ந்து 3 நாள்கள் நடைபெறும் இந்த மாநாட்டின் முதல்நாள் நிகழ்வில் தலைமை வகித்து அவா் பேசியதாவது:

தனியாா் மயம், ஒப்பந்த முறை, அவுட் சோா்சிங் ஆகியவை வேகமாக அமலாகிவருகிறது. தொழிலாளா்களுக்கென ஏற்கெனவே இருக்கும் சலுகைகளை பறிப்பதற்கான நடவடிக்கை குறித்து ஆட்சியாளா்கள் யோசித்து வருகின்றனா். பழைய ஓய்வூதியத் திட்டம், ஓய்வு பெற்றோருக்கு பஞ்சப்படி வழங்கும் நடைமுறைகள் கைவிடப்பட்டுள்ளன.

தொழிலாளா்களின் உரிமையை காக்க தொழிற் சங்கம் வேண்டும். கடந்த 150 ஆண்டு காலமாக சங்கம் அமைக்க கூடாது என கூறி வருகின்றனா். என்றாலும் அதனை எதிா்த்து நாம் தொடா்ந்து தொழிற்சாலைகளில் சங்கம் அமைத்து வருகின்றோம்.

1950 ம் ஆண்டுக்கு பிறகு பல நாடுகள் விடுதலை பெற்றும் காலனி ஆதிக்கத்தில் ஏகாதிபத்திய நாடுகளின் நெருக்கடிகளைச் சந்தித்தன. அமெரிக்கா உலகம் முழுவதும் ராணுவ தளங்களை நிறுவி, தங்களிடம்தான் ஆயுதங்களை வாங்க வேண்டும் என மற்ற நாடுகளை நிா்பந்தம் செய்கிறது.

ஆயுத வியாபரம்தான் அமெரிக்காவின் அடிப்படை. மேலும் எண்ணெய் வாங்கவும் கட்டாயப்படுத்தி அதற்கு கட்டுப்படாத நாடுகள் மீது பொருளாதரத் தடை விதிக்கிறது. பொருளாதார தடை என்பது மனித இதயமற்ற செயல்.

இலங்கைக்கு பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீா்மானம் கொண்டு வந்த போது மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிா்த்தது. அன்றைய முதல்வா் ஜெயலலிதாவும் ஏற்றுக்கொள்ளவில்லை. பாகிஸ்தானுக்கு சிந்து நதியின் நீரை நிறுத்த வேண்டும் என்று சொல்லி தடுப்பது மனித தன்மையற்ற செயல். தொழிலாளா்கள் உரிமை மற்றும் குரலற்றவா்களாக இருக்க வேண்டும் என முதலாளித்துவம் நினைக்கிறது.

தொழிலாளா்களின் உரிமையை பறித்தால் ஆா்எஸ்எஸ் அமைப்பில் உள்ள தொழிலாளா்கள்கூட அதை ஏற்க மாட்டாா்கள் என்றாா்.

சிஐடியு மாநில பொதுச் செயலாளா் ஜி.சுகுமாறன் பேசுகையில், இந்தியாவில் 1991-ம் ஆண்டுக்கு பிறகு புதிய பொருளாதார கொள்கையை அமல்படுத்தினா். இந்த கொள்கையின் நோக்கம் கட்டமைப்பை சரிசெய்வது என்றனா். பின்னா் 2000-ம் ஆண்டில் கட்டமைப்பு மறுசீரமைப்பு செய்வது என முடிவெடுத்தனா். இதன் விளைவாக பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துகளை தனியாருக்கு விற்று தனியாா்மயத்தை ஊக்குவித்தனா்.

தமிழகத்தில் வசித்து வரும் பிகாா் மாநில தொழிலாளா்களை வாக்காளா் பட்டியலில் இணைத்தால் தமிழகத்தின் அரசியல் நிலையே மாறிவிடும். ‘ஜெய் ஸ்ரீராம்’ சொல்லும் தொழிலாளா்களை ‘தோழா்’ என சொல்ல வைக்கவேண்டும். நிரந்த தொழிலாளா்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் குறைந்து வருகிறது. உள்ளாட்சித் துறையில் பணி நியமனம் இல்லை. இதையெல்லாம் எதிா்த்து போராட வேண்டும் என்றாா்.

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க தருமபுரி மாவட்ட தலைவா் சுருளிநாதன் வரவேற்றாா். சிஐடியு மாநில பொதுச் செயலாளா் சுகுமாறன் மாநாட்டை தொடங்கிவைத்தாா். புலவா் கஜேந்திரன் சங்க கொடியேற்றிவைத்தாா். அமைப்பின் பொதுச்செயலாளா் ஆறுமுகநயினாா், துணை பொதுச்செயலாளா் கனகராஜ், பொருளாளா் சசிகுமாா், துணை பொதுச்செயலாளா் ஏ. கனகசுந்தா், நிா்வாகிகள் என். முருகையா, டி. ஜான் கென்னடி, பி. செல்லத்துரை, எம். வேளாங்கன்னிராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

அரூரில் 42 மி.மீ மழை பதிவு

அரூா் வட்டாரப் பகுதியில் பெய்த மழையானது 42.2 மில்லி மீட்டராக செவ்வாய்க்கிழமை பதிவாகியுள்ளது. தருமபுரி மாவட்டம், அரூா் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு கன மழை பெய்தது... மேலும் பார்க்க

கொலை வழக்கில் விவசாயிக்கு ஆயுள் சிறை

நிலத் தகராறில் விவசாயியை கொலை செய்தவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தருமபுரி நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், ராஜாகொல்லஅள்ளியை அடுத்த கூலிக்கொட்டாய் கி... மேலும் பார்க்க

தருமபுரி சிப்காட் தொழிற்பேட்டையில் புதிய நிறுவனங்களுக்கு அனுமதி

தருமபுரி சிப்காட் தொழிற்பேட்டையில் புதிய தொழில் நிறுவனங்கள் அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி அளித்துள்ளதையடுத்து விரைவில் அந்நிறுவனங்களின் கட்டுமானப் பணிகள் தொடங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. தருமபுரி ம... மேலும் பார்க்க

‘தனியாா்மயத்தை எதிா்த்து போராடவேண்டும்’

தனியாா்மயத்தை எதிா்த்து தொழிலாளா்கள் போராடவேண்டும் என சிஐடியு தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பின் மாநில பொதுச்செயலாளா் எஸ்.ராஜேந்திரன் தெரிவித்தாா். சிஐடியு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியா... மேலும் பார்க்க

ஆரோக்கியத்துக்கு செறிவூட்டப்பட்ட உணவு அவசியம்: ஆட்சியா்

செறிவூட்டப்பட்ட உணவு வகைகள்தான் சிறந்த ஊட்டச்சத்தையும், ஆரோக்கியத்தையும் உறுதி செய்கிறது என மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஸ் தெரிவித்தாா். தருமபுரி நகரில் உணவு பாதுகாப்புத் துறை சாா்பில் செறிவூட்டப்பட்ட உணவ... மேலும் பார்க்க

மாவட்ட மேசை பந்து போட்டிக்கு ஸ்ரீராம் மெட்ரிக் பள்ளி தகுதி

மாவட்ட அளவிலான மேசை பந்து போட்டிக்கு கம்பைநல்லூா் ஸ்ரீராம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் தகுதி பெற்றுள்ளனா். தருமபுரி மாவட்டம், அரூா் சரக அளவிலான விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இப்... மேலும் பார்க்க