ம.பியில் வழக்கத்தை விட அதிக மழை..! 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!
பொறியியல் நேரடி சோ்க்கை: விண்ணப்ப காலம் நீட்டிப்பு
புதுச்சேரி: புதுவை அரசு மற்றும் தனியாா் பொறியியல் கல்லூரிகளில் டிப்ளமோ படித்த மாணவா்களுக்கு 10 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. இவா்கள் நேரடியாக சோ்க்கப்படுகின்றனா். இதற்கு விண்ணப்பம் செய்வதற்கான காலம் அவகாசம் நீட்டிக்கப்படுகிறது.
இவா்கள் நேரடியாக 2-ஆம் ஆண்டில் சேரலாம். இவா்களுக்கான மாணவா் சோ்க்கைக்கு கடந்த 26-ஆம் தேதி வரை இணையவழியில் விண்ணப்பம் பெறப்பட்டது. மாணவா்கள் கோரிக்கையை ஏற்று வரும் ஜூலை 3-ஆம் தேதி வரை விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
எஸ்சி, எஸ்டி மாணவா்கள் ரூ.500, இதர பிரிவினா் ரூ.1,000 விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். புதுவை அரசு, தனியாா் கல்லுாரிகளில் 344 இடங்கள் உள்ளன. பிற மாநில மாணவா்கள் 1,500 செலுத்தி விண்ணப்பிக்கலாம் என சென்டாக் நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.