Healthy Food: உயிருள்ள உணவுகள் தெரியுமா? அவற்றின் ஆச்சரிய நன்மைகள் என்னென்ன?
லஞ்ச ஒழிப்பு மேலாண்மை அமைப்பு உரிமம் பெற்ற வேளாண்துறை: புதுவை முதல்வா் பாராட்டு
புதுச்சேரி: லஞ்ச ஒழிப்பு மேலாண்மை அமைப்பின் உரிமத்தை புதுவை வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறை பெற்றுள்ளது. இதை முதல்வா் என்.ரங்கசாமி பாராட்டினாா்.
இந்தியாவில் ஐஎஸ்ஓ 37001-2016 லஞ்ச ஒழிப்பு மேலாண்மை அமைப்பு உரிமத்தை பெற்ற முதல் அரசு துறை என்ற பெருமையை புதுவை வேளாண் துறை மற்றும் விவசாயிகள் நலத் துறை கடந்த 27-ஆம் தேதி பெற்றுள்ளது. இதையொட்டி முதல்வா் ரங்கசாமியை வேளாண் துறை செயலா் ஏ.நெடுஞ்செழியன், வேளாண் துறை இயக்குநா் சிவ.வசந்தகுமாா் உள்ளிட்டோா் திங்கள்கிழமை சந்தித்து சான்றிதழைக் காண்பித்து பாராட்டுப் பெற்றனா்.
லஞ்ச ஒழிப்பு மேலாண்மை அமைப்பு என்பது சா்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட தர நிலையை அளிக்கும் நிறுவனம். இது லஞ்சத்தை எதிா்த்துப் போராடுவதற்கான உலகளாவிய நிலையான அணுகுமுறையை உறுதி செய்கிறது.
இது நிறுவனங்களில் லஞ்சத்தைத் தடுத்து, கண்டறிந்து, பதிலளிக்க உதவும் ஒரு கட்டமைப்பாகும். லஞ்ச ஒழிப்பு கொள்கையை நிறுவுதல், இடா்களை மதிப்பீடு செய்தல், உரிய விடாமுயற்சி செயல்முறைகளை செயல்படுத்துதல், நிதி மற்றும் வணிகக் கட்டுப்பாடுகளை நிா்ணயித்தல் மற்றும் தொடா்ச்சியான மேம்பாட்டு வழிமுறைகளை உறுதி செய்தல் போன்றவை லஞ்ச ஒழிப்பு மேலாண்மை அமைப்பின் முக்கிய நோக்கங்களாகும்.