செய்திகள் :

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு: விஜய் வரவேற்பு

post image

பொள்ளாச்சி பாலியல் வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்ட நிலையில், தீர்ப்பை வரவேற்பதாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தவெக தலைவர் விஜய் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளுக்கு, சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது வரவேற்கத்தக்கது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு, குற்றவாளிகளுக்குச் சாகும்வரை சிறைத் தண்டனை வழங்கி, கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த ஆறு ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில், பாதிக்கப்பட்டவர்களுக்குச் சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக இந்தத் தீர்ப்பு இருக்கும் என நம்புகிறேன். இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட அனைவரும் மன தைரியத்தோடு இந்த வழக்கை எதிர்கொண்டு குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைக்கும் வகையில் செயல்பட்டுள்ளனர். இதற்காக அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம். எனவே, குழந்தைகள், பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கத் தமிழக அரசு விரைவுச் சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்து, 90 நாள்களுக்குள் விசாரித்துத் தீர்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றினோம்.

பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்கு விசாரணையை நீண்ட காலமாக நடத்தி நீட்டிக்காமல், விரைவுச் சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்து, 90 நாள்களுக்குள் விசாரித்துத் தீர்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீண்டும் கேட்டுக்கொள்கிறேன்.

ராணுவத்தில் நம் பெண்கள் வீர தீரத்துடன் சாதித்ததைக் கொண்டாடும் இக்காலத்தில், மகளிரின் பாதுகாப்பில் அரசு மட்டுமின்றி ஒவ்வொருவரும் அக்கறையுடன் செயல்பட்டு, பெண்கள் முன்னேற்றத்திற்கும் பாதுகாப்புக்கும் இனியாவது எவ்விதச் சமரசமுமின்றி உறுதுணையாக இருக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க: பொள்ளாச்சி வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.85 லட்சம் இழப்பீடு

'பெண்கள் அச்சமின்றி புகாரளிக்க தைரியமூட்டும் தீர்ப்பு' - பாஜக வரவேற்பு

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆகியோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலி... மேலும் பார்க்க

'மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்' - பொள்ளாச்சி தீர்ப்பு பற்றி முதல்வர் மு.க. ஸ்டாலின்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். பொள்ளாச்சியில் கடந்த 2019 ஆம் ஆண்டு இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த... மேலும் பார்க்க

பொள்ளாச்சி வன்கொடுமை வழக்கில் தீர்ப்பு: அதிமுக வரவேற்பு!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அதிமுக வரவேற்பு தெரிவித்துள்ளது. பொள்ளாச்சியில் கடந்த 2019 ஆம் ஆண்டு இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, விடியோ எடுத்து மிரட்டி, மீ... மேலும் பார்க்க

நீலகிரி மாவட்டத்துக்கு மே 15-ல் உள்ளூர் விடுமுறை!

உதகையில் மலர்க் கண்காட்சியையொட்டி, வருகிற மே 15 ஆம் தேதி நீலகிரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை காலத்தில் உதகையில் மலர்க் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்... மேலும் பார்க்க

5,180 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் விரைவில் திறப்பு: அமைச்சர் தா. மோ. அன்பரசன்

ரூ.586.94 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 5,180 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் விரைவில் திறக்கப்படவுள்ளதாக குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா. மோ. அன்பரசன்தகவல்தெரிவி... மேலும் பார்க்க

அந்தமானில் தொடங்கியது தென்மேற்குப் பருவமழை!

அந்தமானில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் பல பகுதிகளில் கோடை வெய்யில் மண்டையைப் பிளந்து வருகிறது. அவ்வப்போது இரவில் மிதமான மழை தலைகாட... மேலும் பார்க்க