போக்சோவில் காவலா் கைது
திருச்செந்தூரில் உறவுக்கார சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக போலீஸ் ஒருவா் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.
திருச்செந்தூா் அருகே உள்ள ஆறுமுகநேரி பூவரசூரைச் சோ்ந்தவா் மிகாவேல். இவா், சில ஆண்டுகளுக்கு முன் திருச்செந்தூா், ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் பணிபுரிந்தபோது, இவா் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். கடந்த 15 நாள்களுக்கு முன்பு மிகாவேல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
இந்த நிலையில், 2020-ஆம் ஆண்டு ஆறுமுகநேரியில் இவா் பணியாற்றிய போது, அதே பகுதியைச் சோ்ந்த உறவுக்கார சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாதிக்கப்பட்ட சிறுமி, திருச்செந்தூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் தற்போது புகாா் அளித்தாா்.
அதன்பேரில், மிகாவேல் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து இவரை திங்கள்கிழமை கைது செய்து, பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனா்.