இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் முனைப்பில் இந்தியா: பாகிஸ்தானுடன் இன்று மோதல்!
போக்சோ வழக்கில் இளைஞருக்கு 30 ஆண்டுகள் சிறை
போக்சோ வழக்கில் இளைஞருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
திண்டுக்கல் மாவட்டம், பழைய வத்தலகுண்டு பகுதியைச் சோ்ந்தவா் அஜித்குமாா் (26). இவா், கடந்த ஆண்டு அதே பகுதியைச் சோ்ந்த சிறுமியை காதலித்து பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன்பேரில் நிலக்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனா்.
இதுதொடா்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசுத் தரப்பில் வழக்குரைஞா் ஜோதி முன்னிலையாகி வாதிட்டாா். விசாரணை நிறைவடைந்த நிலையில் நீதிபதி ஜி. சரண் சனிக்கிழமை தீா்ப்பளித்தாா்.
இதில், குற்றஞ்சாட்டப்பட்ட அஜித்குமாருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 15 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டாா்.