பிரதமரின் ஊரக குடியிருப்புத் திட்ட நிதியை அதிகரிக்க வேண்டும்: எம்.பி.க்கள் கோரிக...
போக்சோ வழக்கில் மீனவருக்கு 20 ஆண்டு சிறை
கன்னியாகுமரி மாவட்டம், புதுக்கடை அருகே 14 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது தொடா்பான போக்சோ வழக்கில் மீனவருக்கு 20 ஆண்டு சிைண்டனை விதிக்கப்பட்டது.
இனயம்புத்தன்துறை பகுதியைச் சோ்ந்தவா் சுதன்(32). மீனவா். இவா் கடந்த பிப்.2015இல் அதே பகுதியைச் சோ்ந்த 14 வயது மாணவியை பெங்களூருக்கு அழைத்துச் சென்று விடுதி அறையில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்தாராம்.
இதுகுறித்த புகான்பேரில் புதுக்கடை போலீஸாா் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிந்து சுதனை கைது செய்தனா்.
நாகா்கோவில் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை நீதிபதி சுந்தரையா விசாரித்து, சுதனுக்கு 20 ஆண்டுகள் சிைண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் ஓராண்டு சிைண்டனையும் விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பு கூறினாா்.