செய்திகள் :

போக்சோ வழக்கு: அகில இந்துசபா தலைவர் ஸ்ரீ கைது; விவரம் என்ன?

post image

13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் அகில இந்து மகாசாபாவின் தலைவர் ஶ்ரீ என்கிற ஶ்ரீ கந்தன் போக்சோ சட்டம் மற்றும் எஸ்சி மற்றும் எஸ்டி (வன்கொடுமை தடுப்பு) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறை வெளியிட்டிருக்கும் செய்தியின்படி, பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.

அதனால், சிறுமியின் தாயார் இன்னொருவரை திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வருகிறார். இதற்கிடையில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தந்தையை கவனித்துக்கொள்வதற்காக சிறுமி அத்தையுடன் சென்னை கோடம்பாக்கத்தில் வசித்து வந்திருக்கிறார்.

போக்சோ வழக்கு
போக்சோ வழக்கு

இதற்கிடையில், சிறுமியின் அத்தைக்கு இந்து மகாசாபாவின் தலைவர் ஶ்ரீ கந்தனுடன் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. ஶ்ரீ கந்தனுக்கு சிறுமியை அறிமுகப்படுத்தி, அவருடன் இரவு தங்குவதற்கு வற்புறுத்தியிருக்கிறார்.

சிறுமி மறுத்தபோதெல்லாம், பரிசுப் பொருள்களைக் கொடுத்திருக்கிறார். 2022 முதல் 2023 வரை ECR-ல் உள்ள ஸ்ரீ கந்தனின் பங்களாவில் இரண்டு வருடமாக பாலியல் வன்கொடுமை நடந்ததாக தெரிகிறது.

இதற்கிடையில், சிறுமியின் சொத்து விவகாரம் தொடர்பாக சிறுமிக்கும், அவரின் அத்தைக்கும் வாக்குவாதம் எழுந்தபோது, ஶ்ரீ கந்தனுடன் சிறுமி இருந்த வீடியோ பதிவுகளை சமூக ஊடகங்களில் வெளியிடுவதாக அத்தை மிரட்டியிருக்கிறார்.

இந்த நிலையில்தான், பாட்டியின் இறுதி சடங்கில் கலந்துகொள்ள வந்த சிறுமியின் தாயாரிடம் நடந்தவைகளைத் தெரிவித்திருக்கிறார்.

அதைத் தொடர்ந்து, காவல்நிலையத்தில் ஶ்ரீ கந்தன் மீதும், சிறுமியின் அத்தை மீதும் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர்.

இதற்கும் முன்பும் ஶ்ரீ கந்தன் மீது ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் மற்றும் அவரது வருங்கால மனைவியை கடத்தி மிரட்டி பணம் பறித்தது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரோடு: பெண் குழந்தை கடத்தல், வேதனையில் பெற்றோர்; போலீஸார் தீவிர விசாரணை - நடந்தது என்ன?

ஈரோடு மாவட்டம், சித்தோடு கோணவாய்க்கால் என்ற இடத்தில் மேம்பாலத்துக்கு அடியில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவெங்கடேஷ்,கீர்த்தனா தம்பதி,கடந்த சில மாதங்களாக அங்கு தங்கியிருந்து கூலி வேலை செய்து வருகின்றனர். ... மேலும் பார்க்க

தீபாவளி வசூல்: `கட்டுக் கட்டாக பணம், பட்டுப்புடவைகள்' -வட்டார போக்குவரத்து அலுவலக ரெய்டில் அதிர்ச்சி

தீபாவளி நெருங்கி வரும் நிலையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் உட்பட பல்வேறு அரசு அலுவலகங்களிலும் தீபாவளி விழா லஞ்சம் பெறுவதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தமிழகம் முழுவ... மேலும் பார்க்க

டிஜிட்டல் கைது; ரூ.58 கோடியை இழந்த 72 வயது தொழிலதிபர் - மோசடி கும்பல் சிக்கியது எப்படி?

மும்பையில் டிஜிட்டல் முறையில் கைது செய்து பணம் பறிக்கும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்த இணைய குற்றங்களால் அதிக அளவில் முதியவர்கள் தான் பாதிக்கப்படுகின்றனர். புதிதாக 72 வயது முதியவ... மேலும் பார்க்க

கோத்தகிரி: ஒருபக்கம் சுருக்கு கம்பி, மறுபக்கம் மின்கம்பி - துடிதுடித்து இறந்த 2 கரடிகள்

வனத்துக்கும் வன உயிரினங்களுக்கும் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நீலகிரியில் வன விலங்குகள் இயற்கைக்கு மாறாக உயிரிழக்கும் துயரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. துப்பாக்கி வேட்டைக்கு அடுத்தபடியாக சுர... மேலும் பார்க்க

தீபாவளி வசூல்: பட்டாசு ஆலை, கடைகளில் லட்சக்கணக்கில் வசூல் - விருதுநகரில் பிடிபட்ட தீயணைப்பு வீரர்கள்

விருதுநகரில் தீபாவளிக்காக பணம் வசூலித்த 3 தீயணைப்பு வீரர்களை பணியிட மாற்றம் செய்து தீயணைப்புத்துறை தென் மண்டல துணை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். விருதுநகர் தீயணைப்பு நிலையத்தில் பணிபுரிந்து வந்த வினோத்... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூர்: டாஸ்மாக் சென்றவரை தாக்கி பணம், நகை கொள்ளை; நண்பர் ஏவிய கும்பல் வெறிச்செயல்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி இந்திரா நகரில் வசிப்பவர் முனியசாமி (41). இவர் கூலி வேலை செய்து வருகிறார்.முனியசாமி, தன் நண்பரான கனகராஜ் என்பவருடன் வீட்டில் இருந்து டாஸ்மாக் கிளம்பியுள்ளார். சிவகாசி ரிசர்வ... மேலும் பார்க்க