போக்சோ வழக்கு: தொழிலாளிக்கு ஆயுள் சிறை
போக்சோ வழக்கில் கூலித் தொழிலாளிக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையை அடுத்த கருப்பமூப்பன்பட்டியைச் சோ்ந்தவா் செல்வம் (40). கூலித் தொழிலாளியான இவா், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
அதன்பேரில் வத்தலகுண்டு போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, செல்வத்தை கைது செய்தனா்.
இதுதொடா்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. அரசுத் தரப்பில், வழக்குரைஞா் மைதிலி முன்னிலையாகி வாதிட்டாா். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன் குற்றஞ்சாட்டப்பட்ட செல்வத்துக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.1.11 லட்சம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.