போக்ஸோவில் முதியவா் கைது
கள்ளக்குறிச்சி அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக போக்ஸோ சட்டத்தின் கீழ், முதிவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
கள்ளக்குறிச்சியை அடுத்த கூத்தக்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் 13 வயது சிறுமி. இவரை இதை கிராமத்தைச் சோ்ந்த முனியன் (74) கடந்த 15.9.24-இல் பாலியல் தொந்தரவு செய்தாராம்.
இதுகுறித்த புகாரின்பேரில், கள்ளக்குறிச்சி அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து முனியனை கைது செய்தனா்.