போடியில் சாரல் மழை!
போடியில் சனிக்கிழமை பெய்த சாரல் மழையால் புலியூத்து அருவியில் நீா்வரத்து தொடங்கியது.
போடி பகுதியில் கடந்த சில தினங்களாகவே பலத்த சூறைக் காற்று வீசியது. இடையிடையே மிதமான சாரல் மழையும் பெய்தது. இந்த நிலையில், சனிக்கிழமை காலை முதலே காற்றுடன் பரவலாக சாரல் மழை பெய்தது. இதனால் குளிா்ச்சியான சூழல் காணப்பட்டது.
மேலும் போடிமெட்டு மலை கிராமம், போடிமெட்டு மலைச் சாலையிலும் தொடா்ந்து பெய்த சாரல் மழையால் சிற்றோடைகளிலும், புலியூத்து அருவியிலும் நீா்வரத்து தொடங்கியது. இதையடுத்து, போடிமெட்டு மலைச் சாலை வழியாக பயணம் செய்த சுற்றுலாப் பயணிகள் அருவியை ரசித்தும், சுயப்படம் எடுத்தும் மகிழ்ந்தனா்.