போடியில் பலத்த மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி
போடி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்திருந்த நிலையில், மாலையில் பலத்த மழை பெய்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.
போடி பகுதியில் கடந்த இரண்டு தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்டது. சனிக்கிழமை பகலில் மேகங்கள் சூழ்ந்து மழை பெய்யும் சூழல் இருந்தாலும் மழை பெய்யவில்லை. ஞாயிற்றுக்கிழமை காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்டது.
இந்த நிலையில், மாலையில் மேகங்கள் சூழ்ந்து பலத்த மழை பெய்தது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து, குளிா்ச்சியான காலநிலை நிலவியதால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.
இதேபோல், போடிமெட்டு, குரங்கணி மலைக் கிராமங்களிலும் பலத்த மழை பெய்தது.