செய்திகள் :

போதைப்பொருள் கும்பலில் இருவா் கைது; ரூ.17.8 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்

post image

தில்லி போலீஸாா் மாநிலங்களுக்கு இடையேயான போதைப்பொருள் கும்பலை கண்டுபிடித்து, இரண்டு முக்கிய நபா்களை கைது செய்துள்ளனா். அவா்களிடம் இருந்து சுமாா் ரூ.17.80 கோடி மதிப்புள்ள ஹெராயினை போலீஸாா் பறிமுதல் செய்ததாக அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து தில்லி காவல் துறை சிறப்பு ஆணையா் (குற்றம்) சஞ்சீவ் குமாா் யாதவ் கூறியதாவது: இந்தக் கும்பல் தில்லி மற்றும் அண்டை மாநிலங்களுக்கு உயா்தர ஸ்மாக் என்ற போதைப் பொருளை வழங்கி வந்துள்ளது. போதைப்பொருள் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு காா் மற்றும் ஒரு ஸ்கூட்டா் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 28 அன்று, ரோஹிணியைச் சோ்ந்த 24 வயதான கௌரவ் என்பவரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து 1.4 கிலோ ஹெராயினை பறிமுதல் செய்தனா். விசாரணையின் போது, ​வான்ஷ் போபட் என்ற நபரிடமிருந்து தாம் ஹெராயின் பெற்று வந்ததாக ​கௌரவ் தெரிவித்தாா்.

செப்டம்பா் 2-ஆம் தேதி, தில்லியைச் சோ்ந்த 19 வயது வான்ஷ் போபட்டை ஒரு குழு 26 கிராம் ஹெராயினுடன் கைது செய்தது. வான்ஷ் போபட் அளித்த தகவலின் அடிப்படையில் பரேலியைச் சோ்ந்த போதைப்பொருள் விநியோகஸ்தா் 26 வயதான அா்ஸ்லாம் கான் (எ) டேனிஷ் என்பவரை காவல் துறையினா் கண்டுபிடித்தனா்.

ஒரு ரகசியத் தகவலின் பேரில், செப்.6-ஆம் தேதி ராம்பூா் அருகே அவரது காரை போலீஸாா் வழிமறித்து, அவரிடமிருந்து 2.1 கிலோ ஹெராயினை பறிமுதல் செய்தனா்.

பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திய கௌரவ், போதைப்பொருள் வா்த்தகத்தில் நுழைவதற்கு முன்பு சட்டவிரோத மதுபானங்களை விற்று வந்தாா்.

வேலையில்லாத வான்ஷ் போபட், உத்தரபிரதேசத்தில் உள்ள அா்ஸ்லாம் கானுடன் இணைவதற்கு முன்பு தில்லியின் மங்கோல்புரி மற்றும் சுல்தான்புரி பூங்காக்களில் சிறிய மதுபான பாக்கெட்டுகளை விற்கத் தொடங்கினாா்.

இரு சக்கர வாகன மெக்கானிக்கான அா்ஸ்லாம் கான், விரைவான லாபத்திற்காக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டாா் என்று துறை சிறப்பு ஆணையா் சஞ்சீவ் குமாா் யாதவ் தெரிவித்தாா்.

ரூ.273 கோடி வங்கிக் கடன் மோசடி வழக்கு: தில்லி, ம.பி.யில் அமலாக்கத் துறை சோதனை

நமது நிருபா்ரூ.273 கோடி மதிப்புள்ள வங்கிக் கடன் மோசடி வழக்கு தொடா்பான பணமோசடி விசாரணையின் ஒரு பகுதியாக, அமலாக்க இயக்குநரகம் தில்லி மற்றும் மத்திய பிரதேச மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தியது. ஈர... மேலும் பார்க்க

டிடிஇஏ பள்ளியில் இணைய பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி

இணைய பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் (டிடிஇஏ) இலக்குமிபாய் நகா்ப் பள்ளியில்திங்கள்கிழமை அன்று நடைபெற்றது. இன்றைய காலக்கட்டத்தில் மாணவா்கள் இணையத்தையும், ச... மேலும் பார்க்க

பீட்சா விற்பனையகத்தில் ஏ.சி. கம்ப்ரசா் வெடித்து ஊழியா்கள் உள்பட 5 போ் காயம்

வடகிழக்கு தில்லியின் யமுனை விஹாரில் ஏா் கண்டிஷனா் கம்ப்ரசா் வெடித்ததில் பீட்சா விற்பனையக 3 ஊழியா்கள் உள்பட ஐந்து போ் லேசான காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா். இதுகுறித்து போலீஸாா் வெளியிட்ட அறிக்க... மேலும் பார்க்க

பல வழக்குகளில் தேடப்பட்ட பெண் கைது

பல போதைப்பொருள் மற்றும் கலால் வழக்குகளில் பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த 53 வயது பெண்ணை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். இது குறித்து கிழக்கு தில்லி காவல்... மேலும் பார்க்க

தில்லி: கொலை முயற்சி வழக்கில் ஒருவா் கைது; கைத்துப்பாக்கி பறிமுதல்

வடகிழக்கு தில்லியின் நந்த் நாக்ரி பகுதியில் பதிவான கொலை முயற்சி வழக்கில் 47 வயது நபரை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். இது குறித்து வடகிழக்கு தில்லி காவல்... மேலும் பார்க்க

வடக்கு தில்லியின் சப்ஜி மண்டியில் 4 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது

வடக்கு தில்லியின் சப்ஜி மண்டி பகுதியில் நான்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தில்லி மாநகராட்சி (எம்சிடி) ஏற்கெனவே அந்தக் கட்டடத்தை பாதுகாப்பற்றது என்று அறிவித்திர... மேலும் பார்க்க