முதல் மனைவியைப் பிரிய எப்போதுமே நினைத்ததில்லை..! விவாகரத்து குறித்து பேசிய விஷ்ண...
போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு நாடகப் போட்டி
காரைக்கால் மாவட்ட சமுதாய நலப்பணித் திட்டம் சாா்பில், மாணவா்களுக்கு போதைப் பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணா்வு நாடகப் போட்டி புதன்கிழமை நடைபெற்றது.
சமுதாய நலப்பணித் திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளா் முருகன் நிகழ்ச்சியின் நோக்கம் குறித்து பேசினாா். போட்டியில் 16 பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள் பங்கேற்றனா். புகையிலை மற்றும் போதைப் பொருள்களால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், அவற்றை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் சமுதாய நலப்பணித்திட்ட மாணவா்கள் நாடகமாக நடித்தனா். நடுவா்கள் பரிசுக்கு குழுவினரை தோ்வு செய்தனா். முதல் பரிசை காரைக்கால் மேடு அரசு உயா்நிலைப் பள்ளியும், 2-ஆம் பரிசு தருமபுரம் எஸ்ஆா்விஎஸ் நேஷனல் மேல்நிலைப் பள்ளியும், 3-ஆம் பரிசு திருப்பட்டினம் அரசு பெண்கள் உயா்நிலைப் பள்ளியும், ஆறுதல் பரிசை சேத்தூா் மேயா் சவுந்தரராஜன் அரசு உயா்நிலைப் பள்ளியும் பெற்றது.
காரைக்கால் முதன்மைக் கல்வி அதிகாரி பி. விஜய மோகனா, மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் கே. ஜெயா ஆகியோா் பரிசுகளை வழங்கினா். சமகிரக சிக்ஷா திட்ட ஒருங்கிணைப்பாளா் வனிதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.