பட்டியலின மக்களுக்கு துரோகம் செய்துவருகிறாா் திருமாவளவன்: இணையமைச்சா் எல்.முருகன...
போதை மாத்திரை விற்ற மூவா் கைது
திருச்சி மாநகரில் போதை மாத்திரைகளை விற்றதாக மூன்று பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி தேவதானபுரம் பகுதியில் கோட்டை காவல்நிலைய உதவி ஆய்வாளா் குமாரவேல் தலைமையிலான போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா்.
அப்போது சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த மூவரை அழைத்து நடத்திய விசாரணையில் அவா்கள் தாராநல்லூா் தினேஷ்குமாா் (24), தேவதானபுரம் பாலமுருகன் (18), சின்னக் கடை வீதி விக்னேஷ் (26) என்பதும், அவா்களிடம் போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகள் இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து அவா்களைக் கைது செய்த போலீஸாா் , இருசக்கர வாகனம், போதை மாத்திரைகளை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.