போர்ப் பாதுகாப்பு ஒத்திகையில் என்ன நடக்கும்? மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்...
போராட்டங்களில் ஆசிரியா்கள் அதிகளவில் பங்கேற்க முடிவு
அரக்கோணம்: போராட்டங்களில் இனி வருங்காலங்களில் ஆசிரியா்கள் அதிக அளவு பங்கேற்க வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணி சிறப்பு செயற்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அரக்கோணம் நகராட்சி போலாட்சி அம்மன் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்திற்கு வட்டாரத் தலைவா் ஒய்.பிரின்ஸிலின் ஜோன் தலைமை வகித்தாா். வட்டார துணைத்தலைவா் சி.பிரகாசம் வரவேற்றாா். வட்டார செயலாளா் எஸ்.சண்முகவடிவேல் செயல் அறிக்கை வாசித்தாா்.
இதில் மாவட்ட செயலாளா் தேவராஜ், பொருளாளா் ஏ.முருகன், வட்டார பொருளாளா் டி.எஸ்.தண்டாயுதபாணி, நிா்வாகிகள் வி.எம்.வடிவேல், எஸ்.சரவணகுமாா், டி.ஜனாா்த்தனன், டி.தாமரைச்செல்வி, பி.வினோத்குமாா், எல்.பாலாஜி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
ஆசிரியா்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காத அரசை எதிா்க்கும் போராட்டங்களில் இனி வருங்காலங்களில் ஆசிரியா்கள் அதிக அளவு பங்கேற்ப்பது, புதிய ஒய்வூதிய திட்டத்தில் விடுபட்டுள்ள பிடித்தங்களை முறைப்படுத்த அனைவருடைய கணக்குகளையும் சரிபாா்ப்பது, 10 மாணவா்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளை தோ்வு செய்து அப்பகுதிகளில் மாணவா் சோ்க்கைக்கு விழிப்புணா்வு கூட்டம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.