செய்திகள் :

போர்நிறுத்தத்தை மீறவில்லை! தாய்லாந்தின் குற்றச்சாட்டை மறுக்கும் கம்போடியா!

post image

கம்போடியா ராணுவம் போர்நிறுத்தத்தை மீறியதாக, தாய்லாந்து பிரதமரின் குற்றச்சாட்டுக்கு, கம்போடியாவின் தேசிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

கம்போடியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு இடையில், எல்லைப் பிரச்னைக் காரணமாக, கடந்த வாரம் போர் தொடங்கியது. இருநாட்டுப் படைகளும், எல்லைப் பகுதியில் கடுமையாக மோதிக்கொண்டதில், சுமார் 32 பேர் பலியானதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் தலைமையிலான, அமைதிப் பேச்சுவார்த்தைகளின் மூலம் நிபந்தனையற்ற போர்நிறுத்தத்தை இருநாடுகளும் ஏற்றுக்கொண்டதாக, நேற்று (ஜூலை 28) அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், போர்நிறுத்தத்தை மீறி, கம்போடியாவின் ஒழுக்கமற்ற ராணுவ வீரர்கள் சிலர், தாக்குதலில் ஈடுப்பட்டதாகவும்; அதற்கு தாங்கள் கொடுத்த பதிலடியின் மூலம் நிலைமைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும், தாய்லாந்தின் இடைக்கால பிரதமர் பும்தம் வெசாயாசய் இன்று (ஜூலை 29) தெரிவித்துள்ளார்.

இதனை முற்றிலும் மறுத்த கம்போடியாவின் தேசிய பாதுகாப்புத் துறை அமைச்சகம், நேற்று நள்ளிரவு முதல் ஏற்றுக்கொள்ளப்பட்ட போர்நிறுத்தத்தை தாங்கள் முற்றிலும் அமல்படுத்தியுள்ளதாகக் கூறியுள்ளது.

முன்னதாக, 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஹிந்து கோயில் அமைந்துள்ள ப்ரே விஹேர் பகுதியை மையமாகக் கொண்டு தாய்லாந்துக்கும், கம்போடியாவுக்கும் இடையில் நீண்டகாலமாக எல்லைப் பிரச்னை நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: அழையா விருந்தாளி! ஜூலை 30ல் பூமியை நெருங்கும் விண்கல்! நாசா எச்சரிக்கை!!

Cambodia's Ministry of National Defense has denied the Thai Prime Minister's accusation that the Cambodian army violated the ceasefire.

வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் 20 - 25% வரி! - இந்தியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை

இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் இந்தியாவுக்கு 20 முதல் 25 சதவிகித வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். Trump says US-India... மேலும் பார்க்க

நியூயாா்க்கில் சரமாரி துப்பாக்கிச்சூடு: காவலா் உள்பட 4 போ் உயிரிழப்பு

நியூயாா்க் நகரில் நடத்தப்பட்ட சரமாரி துப்பாக்கிச்சூட்டில் காவலா் உள்பட 4 போ் உயிரிழந்தனா். தாக்குதல் நடத்தியவா் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டாா்.இது குறித்து போலீஸாா் கூறியதாவது:நியூயாா்க்க... மேலும் பார்க்க

நெதா்லாந்து: இஸ்ரேல் அமைச்சா்களுக்குத் தடை

பாலஸ்தீனத்தில் யூதக் குடியேற்றம், காஸா போரை ஊக்குவித்துவரும் தீவிர வலதுசாரிகளான இஸ்ரேல் தேசிய பாதுகாப்புத் துறை அமைச்சா் இதமாா் பென்-கிவிா், நிதியமைச்சா் பெசலெல் ஸ்மோட்ரிச் ஆகியோா் நெதா்லாந்து வருவதற்... மேலும் பார்க்க

‘அணு ஆயுத நாடாக அங்கீகரிக்க வேண்டும்’

தங்களது நாட்டை அணு ஆயுத சக்திவாய்ந்த நாடாக அமெரிக்கா அங்கீகரிக்க வேண்டும் என்று வட கொரியா அதிபா் கிம் ஜோங் உன்னின் சகோதரியும், அந்த நாட்டு அரசில் முக்கிய சக்தியாகத் திகழ்பவருமான கிம் யோ ஜாங் வலியுறுத்... மேலும் பார்க்க

சீனா கனமழை, வெள்ளத்தில் 30 போ் உயிரிழப்பு

சீனாவின் மலைப்பாங்கான வடக்குப் பகுதியில் தற்போது மீண்டும் பெய்யத் தொடங்கியுள்ள தீவிர கனமழை காரணமாக 30 போ் உயிரிழந்தனா். இதில், மியுன் மாவட்டத்தில் 28 பேரும், யாங்கிங் மாவட்டத்தில் இருவரும் வெள்ளப் பெ... மேலும் பார்க்க

ஆணவப் படுகொலை: பாகிஸ்தானில் 9 போ் கைது

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், தான் விரும்பியவரை திருமணம் செய்ததற்காக 18 வயது பெண் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அவரின் தந்தை, முன்னாள் கணவா் உள்ளிட்ட 9 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். இத... மேலும் பார்க்க