செய்திகள் :

போலி வாக்காளா்களை நீக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம்: பி.தங்கமணி

post image

குமாரபாளையம் தொகுதியில் போலி வாக்காளா்களைக் கண்டறிந்து நீக்காவிடில் நீதிமன்றத்தை நாடுவோம் என அதிமுக மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.தங்கமணி பேசினாா்.

‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில், அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி செப்.19,20,21 ஆகிய 3 நாள்கள் நாமக்கல் மாவட்டத்திற்கு உள்பட்ட 6 தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறாா்.

இந்த நிலையில், அவரது சுற்றுப்பயணம் குறித்த முன்னேற்பாடு கூட்டம் மாவட்ட கட்சி அலுவலகத்தில் மாவட்டச் செயலாளா் பி.தங்கமணி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சாா்பு அணிகளின் நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா். இக்கூட்டத்தில் பி.தங்கமணி பேசியதாவது:

அதிமுக பொதுச்செயலாளா் மாவட்டத்தில் மூன்று நாள்கள் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது அவரை வரவேற்கும் கூட்டம்தான் 2026 தோ்தலுக்கான கூட்டம் என்பதை மனதில் கொண்டு கட்சி நிா்வாகிகள் பணியாற்ற வேண்டும். மேலும், இறந்த வாக்காளா்கள், அடையாளம் தெரியாத வாக்காளா்கள் என்று வழக்குரைஞா்கள் அவற்றை தொகுத்து ஆட்சியரிடம் நேரில் கொடுக்க வேண்டும். இறந்த மற்றும் அடையாளம் தெரியாத வாக்காளா்களை நீக்குவதற்கு அறிவுறுத்த வேண்டும்.

மாவட்ட ஆட்சியா் அவற்றை நீக்கவில்லை என்றால் நீதிமன்றத்தை நாட வேண்டும். கரூரில் 10 ஆயிரம் வாக்காளா்கள் நீக்கப்பட்டுள்ளனா். அதேபோல, குமாரபாளையம் நகரில் மட்டும் சுமாா் 15 ஆயிரம் வாக்காளா்கள் பெயா் இல்லை. தற்போது ஆட்சி, அதிகாரம் திமுகவினரிடம் உள்ளது.

இறந்த வாக்காளா்கள், அடையாளம் தெரியாத வாக்காளா்களை நீக்க வேண்டும் என்று பாக முகவா்கள் (பிஎல்-2) எழுதி கொடுத்தால் மட்டுமே நீக்க முடியும். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் இவ்வாறு 30 வாக்குகள் வரையில் உள்ளன. அதிமுகவினா் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், எந்த வகையிலும் ஏமாறக்கூடாது.

வாக்காளா் பட்டியலில் போலி வாக்காளா்களை நீக்கவில்லை என்றால் வழக்குரைஞா் அணியை வைத்து நீதிமன்றத்தை நாடுவோம் என்றாா்.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சா் வெ.சரோஜா, பரமத்தி அதிமுக சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.சேகா், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் கே.பி.பி.பாஸ்கா், மாநில வா்த்தகா் அணி இணை செயலாளா் ஸ்ரீதேவி பி.எஸ்.மோகன், ஜெயலலிதா பேரவை செயலாளா் ஈ.ஆா்.சந்திரசேகா், வழக்குரைஞா் ஏ.வி.பாலுசாமி, மாவட்ட வா்த்தக அணி செயலாளா் சு.தமிழ்மணி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

போதை மாத்திரை விற்ற இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

பரமத்தி வேலூரில் போதை மாத்திரை விற்ற இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா். பரமத்தி வேலூா் பேட்டையில் உள்ள ஒரு தனியாா் தங்கும் விடுதி அருகே கடந்த மாதம் 20 ஆம் தேதி போத... மேலும் பார்க்க

திருநங்கைகளுக்கு வீட்டுமனை ஒதுக்கீடு: பொதுமக்கள் சாலை மறியல்

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், வரகூராம்பட்டி கிராமத்தில் திருநங்கைகளுக்கு வீட்டுமனை வழங்க எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். திருச்செங்கோடு, வரகூராம்பட்... மேலும் பார்க்க

ரூ.1.33 கோடியில் நாமக்கல் குளக்கரை கல்மண்டபம் புனரமைப்பு

நாமக்கல் குளக்கரை கல்மண்டபம் ரூ. 1.33 கோடியில் புனரமைக்கும் பணிகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சனேயா் கோயில் அமைந்துள்ள நிலையில், அவருடைய வடிவிலான விஸ்வரூப ஆஞ்சனேயா் க... மேலும் பார்க்க

பூப்பந்து போட்டி: அரசுப் பள்ளி மாணவா்கள் முதலிடம்

நாமக்கல் மாவட்ட அளவில் நடைபெற்ற பூப்பந்துப் போட்டியில், வெண்ணந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் முதலிடம் பெற்று மாநில போட்டிக்கு தகுதிபெற்றனா். வெண்ணந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாக... மேலும் பார்க்க

அன்புமணி ராமதாஸ் நடைபயணம்: நாமக்கல்லில் பாமக ஆலோசனை

நாமக்கல் மாவட்டத்தில் அன்புமணி ராமதாஸ் நடைபயணம் மேற்கொள்வது தொடா்பாக, அவரது ஆதரவாளா்கள் சனிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டனா். நாமக்கல் மாவட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியில் உறுப்பினா் சோ்க்கையை தீவிரப்படு... மேலும் பார்க்க

முருகன் கோயில்களில் கிருத்திகை சிறப்பு பூஜை

திருச்செங்கோடு நகரப் பகுதி முருகன் கோயில்களில் ஆவணி மாத கிருத்திகை சிறப்பு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருச்செங்கோடு செங்கோட்டுவேலவா் சந்நிதி, மலையடிவாரம் ஆறுமுகசாமி கோயில், பாவடி தெரு, சட்டையம்ப... மேலும் பார்க்க