வாழ்க்கையின் அனுபவங்கள்தான் சவால்களை சந்திக்க உதவும் பாடங்கள்: புதுவை துணைநிலை ஆ...
போலீஸ் மிதித்ததில் குழந்தை பலி: கிராமத்தினர் போராட்டம்!
ராஜஸ்தானில் போலீஸ் மிதித்து குழந்தை பலியானதாகக் கூறி 2 போலீஸார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தின் அல்வார் மாவட்டத்தில் நாகாவான் காவல் நிலையத்திற்கு உள்பட்ட கிராமத்தில் இணைய மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபரைக் கைது செய்வதற்காக காவல்துறையினர் கடந்த சனியன்று (மார்ச். 1) ஒரு வீட்டிற்குச் சென்றனர்.
அங்கு கட்டிலில் தனது தாயின் அருகில் தூங்கிக் கொண்டிருந்த ஒரு மாதமேயான குழந்தை அலிஸ்பா மீது போலீஸார் மிதித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால், காயமடைந்த குழந்தை சம்பவ இடத்திலேயே பலியானது. குழந்தையின் தாய் அவர்களை எதிர்த்தபோது அவரையும் வீட்டை விட்டு போலீஸார் இருவரும் வெளியே தள்ளினர்.
இதையும் படிக்க | ஹரியாணா காங்கிரஸ் பெண் தொண்டர் கொலை: ஒருவர் கைது
இந்தச் சோதனையின்போது பெண் போலீஸ் யாரும் உடன் வரவில்லை என்றும் சம்பந்தப்பட்ட 2 போலீஸ் அதிகாரிகளைக் கைது செய்யவேண்டும் என்றும் குடும்பத்தினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
குழந்தை பலியானதால் ஆத்திரமடைந்த கிராமத்தினர் போலீஸார் இருவரையும் கைது செய்யக்கோரி அல்வார் மவட்ட காவல் கண்காணிப்பாளர் வீட்டின் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது விசாரணை நடத்தப்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.