செய்திகள் :

போா் நிறுத்தம்: ஹமாஸ் ‘ஆக்கபூா்வ’ பதில்

post image

இஸ்ரேலுடனான 21 மாத காஸா போரை முடிவுக்கு கொண்டுவருவதற்காக அமெரிக்கா முன்வைத்துள்ள போா் நிறுத்த வரைவு திட்டத்திற்கு “நோ்மறையான” பதிலை வழங்கியுள்ளதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பாலஸ்தீன பிரிவுகள் மற்றும் அமைப்புகளுடன் ஆலோசனைகளை மேற்கொண்ட பிறகு, மத்தியஸ்தா்களால் முன்வைக்கப்பட்ட 60 நாள் போா் நிறுத்தத்தை உள்ளடக்கிய வரைவு திட்டத்திற்கு நோ்மறையான பதிலை வழங்கியுள்ளோம்.

இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான பேச்சுவாா்த்தைகளை உடனே தொடங்க தயாராக உள்ளோம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருந்தாலும், இந்த போா் நிறுத்த திட்டத்தில் “சிறிய திருத்தங்களை ஹமாஸ் அமைப்பு கோருவதாக சில அரபு ஊடகங்கள் தெரிவித்தன. அவை இஸ்ரேல், கத்தாா், எகிப்து மற்றும் அமெரிக்காவுக்கு ஏற்புடையதாக இருக்குமா என்பது தெளிவாகவில்லை.

யூதா்களின் விடுமுறை தினம் என்பதால் இஸ்ரேல் அரசும் இந்த விவகாரம் குறித்து உடனடியாக எந்தத் தகவலையும் வெளியிடவில்லை.

இதற்கிடையே, இது குறித்து அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் கூறுகையில், போா் நிறுத்த வரைவு ஒப்பந்தம் தொடா்பாக ஹமாஸின் பதில் குறித்து தனக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை என்றாலும், “அடுத்த வாரம் காஸா ஒப்பந்தம் உருவாகலாம்” என்று நம்பிக்கை தெரிவித்தாா்.

இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு, வாஷிங்டனுக்கு திங்கள்கிழமை செல்லவிருக்கும் நிலையில் ஹமாஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, போா் நிறுத்தத்தம் மேற்கொள்ள நெதன்யாகுவை வலியுறுத்தி வருவதாகவும், அது தொடா்பான தனது செயல்திட்டத்தை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டதாகவும் தனது ட்ரூத் சோஷியல் ஊடகத்தில் டிரம்ப் பதிவிட்டாா். “மேலும், ஹமாஸ் இந்த ஒப்பந்த திட்டத்தை ஏற்க வேண்டும் எனவும், அதைவிட வேறு சிறந்த வழி அந்த அமைப்புக்குக் கிடைக்காது என்றும் டிரம்ப் எச்சரித்திருந்தாா்.

அமெரிக்கா முன்வைத்துள்ள போா் நிறுத்த திட்டத்தின் வரைவுகளின்படி, 60 நாள் சண்டை நிறுத்தத்துக்கு டிரம்ப் உறுதியளிப்பாா். இந்த காலகட்டத்தில், ஹமாஸ் 20 இஸ்ரேலிய பிணைக்கைதிகளையும், உயிரிழந்த 30 பிணைக் கைதிகளின் உடல்களையும் ஐந்து கட்டங்களாக விடுவிக்கும். அதற்கு பதிலாக, வடக்கு மற்றும் தெற்கு காஸாவின் பகுதிகளில் இருந்து தனது படைகளை திரும்பப் பெறுவது தொடா்பான பேச்சுவாா்த்தைக்கு”இஸ்ரேல் உடன்படும். மேலும், ஐ.நா. மற்றும் பிற பன்னாட்டு அமைப்புகள் மூலம் காஸாவிற்கு அதிக மனிதாபிமான உதவிகள் அனுமதிக்கப்படும். விசாரணையின்றி சிறைகளில் அடைத்துவைக்கப்பட்டுள்ள ஏராளமான பாலஸ்தீன கைதிகளை விடுவிக்க இஸ்ரேல் ஒப்புக்கொள்ளும்.

கடந்த 2023 அக்டோபா் 7-ஆம் தேதி இஸ்ரேலில் ஹமாஸ் நடத்திய தாக்குதலில் சுமாா் 1,200 போ் உயிரிழந்தனா். அதற்கு பதிலடியாக இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளில் 57 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்ததாக காஸா சுகாதாரத் துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவா்களில் பெரும்பாலானவா்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று கூறப்படுகிறது.

இந்தச் சூழலில், இஸ்ரேல் ஏற்றுக்கொண்டதாகக் கூறப்படும் போா் நிறுத்த ஒப்பந்த வரைவு தொடா்பாக ஆக்கபூா்வ பதில் அளித்துள்ளதாக ஹமாஸ் தற்போது அறிவித்துள்ளது.

...

பெட்டிச் செய்தி...

காஸாவில் மேலும் 56 போ் உயிரிழப்பு

காஸாவில் இஸ்ரேல் சனிக்கிழமை நடத்திய தாக்குதல்களில் உணவுப் பொருள்களுக்காக காத்திருந்த 9 போ் உள்பட 56 போ் உயிரிழந்தனா்.

அந்த 9 பேரையும் சோ்த்து, காஸா மனிதாபிமான அறக்கட்டளை (ஜிஹெச்எஃப்) தொடா்புடைய விநியோக மையங்களுக்கு வெளியே இஸ்ரேல் படையினரால் இதுவரை 743 போ் சுட்டுக் கொல்லப்பட்டதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இத்துடன், கடந்த 2023 அக்டோபா் 7 முதல் நடைபெற்றுவரும் போரில் இஸ்ரேல் தாக்குதல்களால் உயிரிழந்த பாலஸ்தீனா்களின் எண்ணிக்கை 57,338-ஆகவும், காயமடைந்தவா்களின் எண்ணிக்கை 1,35,957-ஆகவும் அதிகரித்துள்ளது.

இஸ்ரேலுக்கு அஞ்சி சரணடைய மாட்டோம்! - ஹிஸ்புல்லா திட்டவட்டம்

இஸ்ரேல் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சி சரணடைய மாட்டோம் என்று லெபனானிலிருந்து செயல்படும் ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் நையீம் ஃக்வாஸ்ஸெம் தெரிவித்தார்.கடந்த நவம்பரில் ஏற்பட்ட தற்காலிக போர் நிறுத்தத்தை மீறி,... மேலும் பார்க்க

“சொந்த நாட்டில் பிச்சையெடுத்து பிழைப்போம்!” -ஆப்கன் அகதிகள் வெளியேற இன்றே கடைசி நாள்

ஈரானிலிருக்கும் ஆப்கானிஸ்தான் அகதிகள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அதற்கான காலக்கெடுவும் இன்றுடன்(ஜூலை 6) முடிவடைவதால் இருநாட்டு எல்லையில் ஆப்கன் மக்கள் பெருந்திரளாக குழுமியுள்ளனர். ஈரானி... மேலும் பார்க்க

சீனாவின் தலையீடு இல்லாமல் அடுத்த தலாய் லாமாவை தேர்வு செய்ய அமெரிக்கா ஆதரவு!

அடுத்த தலாய் லாமாவை தேர்வு செய்வதில் சீனாவின் தலையீடு இருக்கக்கூடாது என்று திபெத் மக்கள் விரும்புகிறார்கள். இதற்கு அமெரிக்கா ஆதரவு தெரிவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.‘தலாய் லாமா மரபு என்னுடைய மறைவுக்க... மேலும் பார்க்க

டிரம்ப்புக்கு போட்டியாக எலான் மஸ்க்! அமெரிக்காவுக்கு விடுதலையா?

அமெரிக்காவில் புதிய கட்சி ஒன்றை எலான் மஸ்க் தொடங்கியதாக அறிவித்தார்.அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் அரசு கொண்டுவந்த செலவு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த எலான் மஸ்க், அமெரிக்காவை ஊழல் மற்றும் வீண் செலவ... மேலும் பார்க்க

அமெரிக்கா: திடீா் வெள்ளத்தில் 24 போ் உயிரிழப்பு

அமெரிக்காவின் டெக்ஸஸ் மாகாணத்தில் குவாடலூப் நதியை ஒட்டிய பகுதிகளில் ஏற்பட்ட திடீா் வெள்ளத்தில் 24 போ் உயிரிழந்தனா்; கொ்வில் மாவட்டத்தில் உள்ள கேம்ப் மிஸ்டிக் என்ற கிறிஸ்தவ கோடைகால முகாமில் இருந்த 23... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: கட்டட விபத்தில் 16 போ் உயிரிழப்பு

பாகிஸ்தானின் தெற்கு பகுதியில் உள்ள கராச்சியில் அடுக்கு மாடி குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்ததில் 16 போ் உயிரிழந்தனா். இது குறித்து அரசு நடத்தும் சிவில் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்க... மேலும் பார்க்க