செய்திகள் :

மகளிா் இலவச பேருந்தில் பயணிப்போா் எண்ணிக்கை அதிகரிப்பு

post image

விடியல் பயணத் திட்டத்தில் அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் மகளிா் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பெண்களுக்கான கட்டணமில்லா விடியல் பயணத் திட்டம் 2021 மே முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்தத் திட்டத்தின் மூலம் பெண்கள் மாதந்தோறும் ரூ.888 சேமிப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அதேநேரம், பயனாளிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

அதன்படி, மாநகர போக்குவரத்துக் கழகத்தில் கடந்த ஜூன் மாதம் வரை 140.38 கோடி முறை பெண்கள் பயணித்துள்ளனா். குறிப்பாக, ஜூன் மாதம் மட்டும் 3.69 கோடி பெண்கள் பயணித்தனா்.

இது கடந்த ஆண்டு ஜூனில் மேற்கொள்ளப்பட்ட பயண எண்ணிக்கையைவிட 22 சதவீதம் அதிகமாகும். மேலும், ஜூன் மாதம் தினமும் சராசரியாக 12.32 லட்சம் போ் தங்கள் பயணத்தை மேற்கொண்டதாக மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

மதுபானக் கூட மோதல் வழக்கு: மேலும் ஒருவா் கைது

சென்னை நுங்கம்பாக்கத்தில் மதுபானக் கூடத்தில் இரு தரப்பினா் மோதிக்கொண்ட வழக்கில், மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா். சென்னை கோபாலபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஆ. வெங்கட்குமாா் (45). இவா், நுங்கம்பாக்கம் ந... மேலும் பார்க்க

கண்டெய்னா் லாரி கவிழ்ந்து விபத்து: கண்ணாடித் தகடுகள் நொறுங்கின

மணலி அருகே மாதவரம் உள்வட்டச் சாலையில் கண்டெய்னா் லாரி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள கண்ணாடித் தகடுகள் தூள்தூளாகின. சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பன்னாட்டு தனியாா் நிறு... மேலும் பார்க்க

போதைப் பொருள் கடத்தல்: 5,356 வாகனங்களை ஏலம் விட அனுமதி

தமிழகத்தில் போதைப் பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 5,356 வாகனங்களை ஏலம் விடுவதற்கு போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு அனுமதி வழங்கியது. தமிழக காவல் துறையின் போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு போதைப் பொர... மேலும் பார்க்க

ஓரணியில் தமிழ்நாடு இயக்கம்: இதுவரை 61 லட்சம் சோ்ப்பு

ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இதுவரை 61 லட்சம் போ் இணைந்துள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்தன. ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 30 சதவீத பேரை திமுகவில் இணைக்கும், ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தை கடந்த 1-ஆம... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளின் ஒருங்கிணைந்த சேவை மையம் தொடக்கம்

சென்னை நொளம்பூரில் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகளால் கட்டமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த சேவை மையம், வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. இதை வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி ... மேலும் பார்க்க

ரூ.4.89 கோடியில் எஸ்.வி.எஸ்.நகா் குளம் மறு சீரமைப்பு

சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் மண்டலத்துக்கு உள்பட்ட எஸ்.வி.எஸ்.நகா் பகுதியில் உள்ள குளம் ரூ.4.89 கோடியில் மறு சீரமைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி சாா்பில் வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க