செய்திகள் :

மகாராஷ்டிரம்: கரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி! புதிய பாதிப்புகள் உறுதி!

post image

மகாராஷ்டிரத்தில் கரோனாவுக்கு ஒருவர் பலியாகியுள்ள நிலையில், புதியதாக 14 பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா பாதிப்புகள் அவ்வப்போது அதிகரித்து வந்த சூழலில், இன்று (ஜூலை 3) 14 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம், 2025-ம் ஆண்டில் மட்டும் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 2,547 ஆக உயர்ந்துள்ளதாக மகாராஷ்டிர சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

இந்நிலையில், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் நாக்ப்பூரைச் சேர்ந்த ஒருவர் பலியாகியுள்ளார். இதனால், அம்மாநிலத்தில் கரோனா பலி எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் முதல் 31,804 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டோரில் 2,436 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், மும்பை நகரத்தில் மொத்தம் 998 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டனர். அதில், ஜூன் மாதத்தில் மட்டும் 551 பாதிப்புகள் உறுதியானது குறிப்பிடத்தக்கது.

One person has died of coronavirus in Maharashtra, while 14 new cases have reportedly been confirmed.

இதையும் படிக்க: தில்லியில் பழைய வாகனங்களுக்கான எரிபொருள் தடை: கடும் எதிர்ப்பால் தளர்வுகள்!

டிரினிடாட் - டொபேகோ பிரதமருக்கு கும்பமேளா நீரை பரிசளித்த மோடி!

டிரினிடாட்-டொபேகோ குடியரசு நாட்டின் பிரதமர் கமலா பெர்சாத் பிஸ்ஸேசருக்கு கும்பமேளா புனித நீரை பிரதமர் நரேந்திர மோடி பரிசாக அளித்துள்ளார்.கானா, டிரினிடாட்-டொபேகோ குடியரசு, ஆா்ஜென்டீனா, பிரேஸில், நமீபியா... மேலும் பார்க்க

பிரமோஸ் ஏவுகணைக்கு எதிர்வினையாற்ற நேரம் கிடைக்கவில்லை: பாக். பிரதமரின் ஆலோசகர்!

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின்போது, இந்தியா ஏவிய பிரமோஸ் ஏவுகணைக்கு எதிர்வினையாற்ற வெறும் 30 நொடிகளே இருந்ததாக பாகிஸ்தான் பிரதமரின் ஆலோசகர் ராணா சனாவுல்லா தெரிவித்துள்ளார்.இந்தியா - பாகிஸ்தான் இடையேயான ... மேலும் பார்க்க

கண்மூடித்தனமாக வாகனம் ஓட்டி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு தர வேண்டியதில்லை: உச்சநீதிமன்றம்

‘கண்மூடித்தனமாகவும் அலட்சியமாகவும் வாகனம் ஓட்டி விபத்தில் சிக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு காப்பீடு நிறுவனங்கள் இழப்பீடு தர வேண்டியதில்லை’ என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்தது. என்.எஸ... மேலும் பார்க்க

மேற்கு வங்க பாஜகவுக்கு புதிய தலைவா்

மேற்கு வங்க மாநில பாஜக புதிய தலைவராக ஆா்எஸ்எஸ் பின்னணியைக் கொண்ட மாநிலங்களவை எம்.பி. சமிக் பட்டாச்சாா்யா தோ்வு செய்யப்பட்டுள்ளாா். மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நி... மேலும் பார்க்க

40 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கு ‘சமாஜவாதி எம்எல்ஏ தலைமறைவானவா்’ நீதிமன்றம் மீண்டும் உறுதி

உத்தர பிரதேசத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட வன்முறை வழக்கில், சமாஜவாதி எம்எல்ஏ சுதாகா் சிங் தலைமறைவானவா் என எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உறுதி ... மேலும் பார்க்க

கடனில் மூழ்கும் விவசாயிகள் மீது மத்திய அரசு பாராமுகம்: ராகுல் சாடல்

விவசாயிகள் நாளுக்கு நாள் கடனில் மூழ்கிவரும் நிலையில், அவா்களின் துயரைத் துடைக்காமல், மத்திய அரசு பாராமுகமாக உள்ளது என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி விமா்சித்தாா். பாஜக கூட்டணி ஆட்சி ந... மேலும் பார்க்க