செய்திகள் :

மகா கும்பமேளாவில் மீண்டும் தீ விபத்து!

post image

உத்தரப் பிரதேசத்தின், பிரயாக்ராஜில் பிரம்மாண்டமாக நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவில் மீண்டும் தீ விபத்து ஏற்படுத்தி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா ஜனவரி 13-ஆம் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. மகா சிவராத்திரி திருநாளான பிப். 26-ஆம் தேதிவரை, 45 நாள்களுக்கு நடைபெறும் இந்த ஆன்மிக பெருநிகழ்வில் உலகம் முழுவதும் இருந்து சுமார் 10 கோடி மக்கள் இதுவரை புனித நீராடிச் சென்றுள்ளனர்.

இந்த நிலையில், மகா கும்பமேளா பகுதியின் மண்டலம் 2-இல் இன்று காலை மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது அங்குள்ளோரை அச்சமடையச் செய்துள்ளது.

இதுதொடர்பாக தீயணைப்பு அதிகாரி பிரமோத் சர்மா கூறுகையில்,

வாரணாசியில் இருந்து கும்பமேளாவுக்கு வந்திருந்த கார் இன்று காலை திடீரென தீப்பிடித்து எரிந்தது. அதையொட்டி அதனருகில் இருந்த மற்றொரு காரும் தீப்பற்றி எரியத் தொடங்கியது.

சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த தீயணைப்புத் துறையினர் உடனடியாக கார்களில் இருந்தவர்களைப் பாதுகாப்பாக மீட்டு, தீயை அணைத்தனர். இந்த தீ விபத்து சம்பவத்தில் உயிர்ச்சேதமோ, யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை என்று அவர் கூறினார்.

இதற்கு முன்னதாக ஜன.19ல் கும்பமேளாவில் 19-வது மண்டலத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் பெரும் தீ விபத்து ஏற்பட்டு, 18 கூடாரங்கள் தீக்கிரையாகின. இதனால் கும்பமேளாவிற்கு வந்திருந்த மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. நல்வாய்ப்பாக இதில் எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை.

13வது மாடியில் இருந்து விழுந்த குழந்தையை துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய நபர்

13வது மாடியில் இருந்து விழுந்த குழந்தையை துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய நபருக்கு பாராட்டு குவித்து வருகிறது. மகாராஷ்டிர மாநிலம், தாணே, டாம்பிவிலியில் உள்ள கட்டடத்தின் 13வது மாடியில் பால்கனியில் விளைய... மேலும் பார்க்க

கர்நாடக முதல்வர் மனைவிக்கு அமலாக்கத்துறை சம்மன்!

முடா நில ஒதுக்கீடு வழக்கில் கர்நாடக முதல்வரின் மனைவி பார்வதி, அமைச்சர் சுரேஷ் ஆகியோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. மேலும் பார்க்க

நாட்டிலேயே முதல் மாநிலம்: உத்தரகண்டில் அமலானது பொது சிவில் சட்டம்!

பாஜக ஆளும் உத்தரகண்டில் பொது சிவில் சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம் சுதந்திர நாட்டில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்ட முதல் மாநிலமாக உத்தரகண்ட் மாறியிருக்கிறது.உத்தரகண்ட் மாநிலத்தில் பொது ச... மேலும் பார்க்க

திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய அமித்ஷா, யோகி ஆதித்யநாத்

பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவின் திரிவேணி சங்கமத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா திங்கள்கிழமை புனித நீராடினாா்.கங்கை, யமுனை, சரஸ்வதி (புராண நதி) ஆகிய 3 புனித நதிகள் சங்கமிக்கும் இடமான பிரயாக்ராஜ... மேலும் பார்க்க

15 வாக்குறுதிகள்.. தேர்தல் அறிக்கையை வெளியிட்ட ஆம் ஆத்மி!

தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சி 15 வாக்குறுதிகளை தேர்தல் அறிக்கையாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் வெளியிட்டுள்ளார். தேர்தல் அறிக்கை வெளியீட்டு வ... மேலும் பார்க்க

சமூக நீதியை அடிப்படையாகக் கொண்டது தேசிய கல்விக் கொள்கை: யுஜிசி தலைவர்

தேசிய கல்விக் கொள்கை, சமூக நீதியை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டது என்று பல்கலைக்கழக மானியக் குழு தலைவர் ஜகதீஷ் குமார் தெரிவித்தார்.சென்னையில் உள்ள கிராண்ட் சோழா ஹோட்டலில் தி நியூ இந்தியன் எக்ஸ்... மேலும் பார்க்க