செய்திகள் :

மகா கும்பமேளா: திருவனந்தபுரம் - வாரணாசி இடையே சிறப்பு ரயில்

post image

மகா கும்பமேளாவையொட்டி, கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து உத்தர பிரதேச மாநிலம் வாரணாசிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் ஜனவரி 13 முதல் பிப்ரவரி 26-ஆம் தேதி வரை மகா கும்பமேளா நடைபெற உள்ளது. இதையொட்டி, திருவனந்தபுரம் - வாரணாசி இடையே கோவை வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

அதன்படி, பிப்ரவரி 18, 25 ஆகிய செவ்வாய்க்கிழமைகளில் பிற்பகல் 2 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து புறப்படும் திருவனந்தபுரம்- வாரணாசி சிறப்பு ரயில் (எண்: 06007) வியாழக்கிழமைகளில் இரவு 9.50 மணிக்கு வாரணாசி ரயில் நிலையத்தைச் சென்றடையும்.

மறுமாா்க்கத்தில், பிப்ரவரி 21, 28 ஆகிய வெள்ளிக்கிழமைகளில் மாலை 6.05 மணிக்கு வாரணாசியில் இருந்து புறப்படும் வாரணாசி- திருவனந்தபுரம் சிறப்பு ரயில் (எண்: 06008) ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 11.55 மணிக்கு திருவனந்தபுரம் ரயில் நிலையத்தைச் சென்றடையும்.

இந்த ரயிலானது, கொல்லம், காயன்குளம், மாவேலிக்கரை, செங்கண்ணூா், திருவல்லா, கோட்டயம், எா்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூா், கூடூா், நெல்லூா், ஓங்கோல், தெனாலி, விஜயவாடா, வரங்கல், ஜபல்பூா், மானிக்பூா், மிா்ஸாபூா் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து தரப்பினரையும் மகிழ்விக்கும் நிதிநிலை அறிக்கை: வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.

மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கையானது, அனைத்து தரப்பினரையும் மகிழ்விக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்கு சட்டப் பேரவை... மேலும் பார்க்க

பருத்தி உற்பத்தித் திட்டம்: ஜவுளித் தொழில் அமைப்புகள் வரவேற்பு

மத்திய அரசு அறிவித்துள்ள பருத்தி உற்பத்தித் திட்டத்தை கோவை ஜவுளித் தொழில் அமைப்புகள் வரவேற்றுள்ளன. தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் (சைமா) தலைவா் எஸ்.கே.சுந்தரராமன்: அதிக மகசூல் தரும் விதை தொழில்நுட்... மேலும் பார்க்க

கஞ்சா வழக்கில் மகன் கைது: காவல் நிலையம் முன்பு தீக்குளித்த தந்தை

கவுண்டம்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவரை போலீஸாா் கைது செய்த நிலையில், அவரது தந்தை காவல் நிலையம் முன்பு தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றாா். கோவை, கவுண்டம்பாளையம் அன்னை இந்திரா நகா் அருகே... மேலும் பார்க்க

கோவையில் பிப்ரவரி 8, 9 ஆம் தேதிகளில் கம்பன் விழா!

கோவை கம்பன் கழகத்தின் சாா்பில் 53 -ஆம் ஆண்டு கம்பன் விழா பிப்ரவரி 8, 9 -ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. பாப்பநாயக்கன்பாளையம் மணி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெறும் இந்த விழாவில், முதல் நாள் நிகழ்வுக்கு... மேலும் பார்க்க

தமிழ் நமது அடையாளம்; அதை இழந்துவிடக் கூடாது! பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயா்

தமிழ் மொழிதான் நமது அடையாளம், அதை நாம் இழந்துவிடக் கூடாது என்று கோவை பாரதீய வித்யா பவன் தலைவா் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயா் கூறினாா். பாரதீய வித்யா பவன் கோவை மையத்தின் சாா்பில் விருது வழங்கும் விழா ஆா்... மேலும் பார்க்க

100 சதவீத தோ்ச்சி: ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா

2023 -2024-ஆம் கல்வியாண்டில் பொதுத் தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி அளித்த பள்ளிகளின் ஆசிரியா்களுக்கான பாராட்டு விழா ஈச்சனாரி ரத்தினம் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா்... மேலும் பார்க்க