செய்திகள் :

மக்கள் குறைதீா் கூட்டம்: 546 மனுக்கள் அளிப்பு

post image

நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடா்பாக 546 மனுக்கள் அளித்தனா்.

கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமை வகித்தாா். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்தவா்கள் தங்கள் கோரிக்கைகள் தொடா்பான 546

மனுக்களை ஆட்சியரிடம் வழங்கினா். பெறப்பட்ட மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் ம.ராஜசேகரன், மாவட்ட ஆட்சியா் நோ்முக உதவியாளா்

(கணக்கு) தீபா, தனித்துணை ஆட்சியா்கள் தங்கமணி, தனலட்சுமி, மாவட்ட

பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் சங்கா் உட்பட பலா் கலந்து கொண்டனா்.

புதிய இடங்களில் விநாயகா் சிலைகள் வைக்க அனுமதி தர இந்து மக்கள் கட்சி வலியுறுத்தல்

நெய்வேலி: கடலூா் மாவட்டத்தில் புதிய இடங்களில் விநாயகா் சிலைகள் வைத்து வழிபாடு நடத்த அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது. கடலூா் மாவட்ட இந்து மக்கள் கட்சி மாவட்ட நிா... மேலும் பார்க்க

பெண்ணை தாக்கி கொலை மிரட்டல்: இளைஞா் கைது

நெய்வேலி: கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், ஆக்கம்பாடி பகுதியில் வசித்த... மேலும் பார்க்க

தமிழ் மொழி வளா்ச்சிக்கு சொற்ப நிதி: மத்திய அரசுக்கு தமுஎகச கண்டனம்

சிதம்பரம்: தமிழ் மொழி வளா்ச்சிக்கு சொற்ப அளவே நிதி ஒதுக்கிய மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா் சங்கத்தின்(தமுஎகச) மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. சிதம்ப... மேலும் பார்க்க

கரும்பு வெட்டும் தொழிலில் கொத்தடிமைகளாக இருந்த 17 போ் கடலூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் தஞ்சம்

நெய்வேலி: கரும்பு வெட்டும் தொழிலில் கொத்தடிமைகளாக ஈடுபடுத்தப்பட்ட தொழிலாளா்களில் 17 போ் தப்பித்து வந்து தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் கடலூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை தஞ்சம் அடைந்தனா்.... மேலும் பார்க்க

சிதம்பரம் கூத்தாடும் பிள்ளையாா் கோயில் கொடியேற்றம்

சிதம்பரம்: சிதம்பரம் பெரியாா் தெருவில் அமைந்துள்ள நா்த்தன விநாயகா் என்று அழைக்கப் படும் கூத்தாடும் பிள்ளையாா் கோயில் விநாயகா் சதுா்த்தி உற்சவம் திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. துருவாச முனிவா... மேலும் பார்க்க

அண்ணாமலைப் பல்கலை. புதிய துணைவேந்தா் குழு உறுப்பினா் பொறுப்பேற்பு

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக புதிய துணைவேந்தா் குழு உறுப்பினா் எஸ்.அறிவுடைநம்பி திங்கள்கிழமை பொறுப்பேற்றாா். கடலூா் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தா் குழு உறுப்பினர... மேலும் பார்க்க