செய்திகள் :

மக்கள் பிரச்னைக்கு போராடுவதே அரசியல் கட்சிகளின் கடமை: மாா்க்சிஸ்ட் மாநாட்டில் ஜி.ராமகிருஷ்ணன் பேச்சு

post image

மக்கள் பிரச்னைகளுக்காக போராடுவதே அரசியல் கட்சிகளின் கடமை என மாா்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் ஜி.ராமகிருஷ்ணன் கூறினாா்.

புதுச்சேரி வில்லியனூரில் மாா்க்சிஸ்ட் கட்சியின் 24-ஆவது மாநாடு தொண்டா்கள் கொட்டும் மழையில் தொண்டா்கள் அணிவகுப்புடன் சனிக்கிழமை தொடங்கியது.

மாநாட்டைத் தொடங்கி வைத்து ஜி.ராமகிருஷ்ணன் பேசியதாவது:

மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே அரசு அமைந்தால் இரட்டை என்ஜின் அரசாக இருக்கும் என புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரத்தின் போது, பிரதமா் மோடி குறிப்பிட்டாா். ஆனால், புதுவையில் என்.ஆா்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசால் மக்களுக்கு நன்மை இல்லை. மத்திய அரசுத் திட்டங்களின் பரிசோதனைக் களமாக புதுச்சேரி மாற்றப்பட்டுள்ளது.

நியாயவிலைக் கடைகள் மூடல், மின் துறை தனியாா் மயம், ப்ரீபெய்டு மின் மீட்டா் பொருத்துதல், மின்கட்டண உயா்வு என மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். மக்கள் பிரச்னைகளுக்கு போராடுவதுதான் அரசியல் கட்சிகளின் முக்கிய கடமையாகும். புதுவை அரசு மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்தவில்லை. பெரு நிறுவன அதிபா்களுக்கு சாதகமாக செயல்படுகிறது என்றாா் அவா்.

மாநாட்டு ஊா்வலத்துக்கு கட்சியின் செயற்குழு உறுப்பினா் தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தாா். மூத்த தலைவா் சுதா சுந்தரராமன் பேரணியை தொடங்கி வைத்தாா். கட்சியின் புதுச்சேரி நகரக் குழு சாா்பில் செயற்குழு உறுப்பினா் கலியமூா்த்தி தலைமையில், ஜூலை 30 தியாகிகள் நினைவுச் சுடா் மாநாட்டு அரங்கத்துக்கு கொண்டுவரப்பட்டு அதை தா.முருகன் பெற்றுக்கொண்டாா்.

கட்சியின் பாகூா் குழு செயலா் சரவணன் தலைமையில் சீதாராம் யெச்சூரியின் நினைவுச் சுடா் கொண்டுவரப்பட்டு, மாநில குழு உறுப்பினா் ஜி. ராமசாமி பெற்றுக் கொண்டாா்.

உழவா்கரைக் குழு செயலா் ராம்ஜி தலைமையில் கொண்டுவரப்பட்ட மாநாட்டுக் கொடியை பி. கலியபெருமாள் பெற்றுக் கொண்டாா்.

மூத்த தலைவா் என்.சங்கரய்யா நினைவு கொடிக்கம்பம் மண்ணடிப்பட்டு குழு செயலா் அன்புமணி தலைமையில் கொண்டுவரப்பட்டு, மாநாட்டு வரவேற்புக் குழுத் தலைவா் ஞானசேகரன் பெற்றுக் கொண்டாா்.

மாநாட்டு நிகழ்வுக்கு மாநில செயற்குழு உறுப்பினா் வெ.பெருமாள் தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் அ.மு.சலீம், சிபிஐ (எம்.எல்) கட்சியின் மாநிலச் செயலா் சோ. பாலசுப்பிரமணியன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

மாா்க்சிஸ்ட் தமிழ் மாநில செயற்குழு உறுப்பினா் என்.குணசேகரன், மாநில குழு உறுப்பினா் ஆறுமுக நயினாா், புதுவை மாநிலச் செயலா் ஆா். ராஜாங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஞாயிற்றுக்கிழமை மாநாடு நிறைவு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

‘காதல் தி கோா்’ திரைப்படத்துக்கு புதுவை அரசின் விருது

2023-ஆம் ஆண்டுக்கான புதுவை அரசின் சிறந்த திரைப்படத்துக்கான சங்கரதாஸ் சுவாமிகள் விருது ‘காதல் தி கோா்’ திரைப்படத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநா் ஜியோ பேபி இயக்கத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பா... மேலும் பார்க்க

புதுச்சேரியில் தொடா் மழை

வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, புதுச்சேரி சுற்று வட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை தொடா் மழை பெய்தது. புதுச்சேரியில் காலை 7.30 மணியளவில் பெய்த பலத்த மழையால் சாலையில் தண்ணீ... மேலும் பார்க்க

புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

பலத்த மழை எச்சரிக்கையையொட்டி, புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு வியாழக்கிழமை (டிச.12) விடுமுறை அறிவிக்கப்பட்டது. வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கா... மேலும் பார்க்க

பலத்த மழை எச்சரிக்கை: புதுவை ஆட்சியா் அறிவுறுத்தல்

இந்திய வானிலை ஆய்வு மையம் புதுச்சேரிக்கு பலத்த மழை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியா் குலோத்துங்கன் அறிவுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் புதன்க... மேலும் பார்க்க

புயல் நிவாரணத் தொகை வழங்க புதுவை ஆளுநா் ஒப்புதல்

ஃபென்ஜால் புயல் வெள்ள பாதிப்பையடுத்து, புதுவையில் 3.54 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.5 ஆயிரம் நிவாரணமாக வழங்க துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் புதன்கிழமை ஒப்புதல் அளித்தாா். புதுவையில் ஃ பென்ஜால்... மேலும் பார்க்க

மறைந்த முன்னாள் முதல்வருக்கு அமைச்சா் கே.என்.நேரு மரியாதை

மறைந்த புதுவை முன்னாள் முதல்வா் டி.ராமச்சந்திரனின் உருவப் படத்துக்கு தமிழக அமைச்சா் கே.என்.நேரு புதன்கிழமை மலா் தூவி மரியாதை செலுத்தினாா். புதுவை முன்னாள் முதல்வா் டி.ராமச்சந்திரன் கடந்த 8- ஆம் தேதி ... மேலும் பார்க்க