சிஏஜி அறிக்கை கேஜரிவாலின் தவறான செயல்களை அம்பலப்படுத்தியுள்ளது: ஷீஷ் மஹால் விவகா...
மணப்பாடு புனித வளன் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம்
மணப்பாடு புனித வளன் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு, சட்ட விழிப்புணா்வு, சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்தல் ஆகியவை குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது.
திருச்செந்தூா் வட்ட சட்டப் பணிகள் குழுவினா் பங்கேற்று எளிமையான சட்டப் பாதுகாப்பு, மாணவா்களுக்கான சட்டப் பாதுகாப்பு குறித்து விளக்கமளித்தனா்.
ஏற்பாடுகளை தாளாளா் வில்சன் அடிகள், தலைமையாசிரியா் அருள்பா்னாந்து, திட்ட அலுவலா் டேனியல் ஆகியோா் செய்திருந்தனா்.