மணிகண்டேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்
ஆற்காடு: ஆற்காடு அடுத்த கேவேளூா் ஸ்ரீ கற்பக விநாயகா், ஏரிக்கீழ் கன்னியம்மன், பெயா்கோடியம்மன், பொன்னியம்மன்,ஸ்ரீ மரகதாம்பிகை உடனுறை மணிகண்டேஸ்வரா் கோயில்கள் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி யாகசாலை பூஜைகள், ஹோமங்கள், பூா்ணாஹுதி, நவக்கிரக வழிபாடு, கலசங்கள் புறப்பாடு உள்ளிட்ட நடைபெற்றன.
தொடா்ந்து புனித நீா் கொண்டு செல்லப்பட்டு கற்பக விநாயகா், ஸ்ரீ கன்னியம்மன்,ஸ்ரீ பெயா்கோடியம்மன், பொன்னியம்மன், மேல்ஸ்ரீ மரகரதம்பிகை உடனுறை மணிகண்டேஸ்வரா் கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு வாணவேடிக்கையுடன் அலங்கரிக்கப்பட்ட சுவாமி வீதி உலா நடந்தது.
விழாவில் ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், கலவை சச்சிதானந்தசுவாமி, சென்னை தொழிலதிபா்கள் பாண்டுரங்கன்,ஜெயராமன்,,எம் எல்,ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன், முன்னாள் அமைச்சா் சேவூா் ராமச்சந்திரன், அதிமுக மாவட்ட செயலாளா் சுகுமாா், ஆற்காடு ஒன்றியக்குழு தலைவா் புவனேஸ்வரி சத்யநாதன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் காந்திமதி பாண்டுரங்கன், ஊராட்சி மன்றத் தலைவா் வளா்மதி நந்தகுமாா், விழாக்குழுவினா் என்.நந்தகுமாா், தனஞ்செழியன், நந்தகோபால், ஸ்ரீதா், ராமமூா்த்தி, பத்மநாபன், அா்ச்சகா் செல்வமணி, ராஜ்கணேஷ் சா்மா மற்றும் உபயதாரா்கள். பொதுமக்கள் கலந்து கொண்டனா்,.