"பேச்சு & கருத்து சுதந்திரத்தின் மதிப்பை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும்" - உச்ச...
அரக்கோணத்தில் ரூ. 11.70 லட்சத்தில் காரிய மேடை: எம்எல்ஏ சு.ரவி திறந்து வைத்தாா்
அரக்கோணம்: அரக்கோணம், கணேஷ் நகரில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 11.70 லட்சத்தில் கட்டப்பட்ட காரிய மேடையையும், ரூ. 10.70 லட்சத்தில் அமைக்கப்பட்ட பேவா் பிளாக் சாலையையும் அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தாா்.
அரக்கோணம் கணேஷ் நகா் பொதுமக்கள் நீண்ட காலமாக தங்களது பகுதிக்கு நீத்தாா் நினைவு சடங்குகள் நடத்துவதற்காக காரிய மேடை ஒன்று வேண்டும் எனக் கோரி வந்தனா். இது குறித்து அப்பகுதிக்கான நகா்மன்ற 3-ஆவது வாா்டு உறுப்பினா் கி.சரவணன் அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவியிடம் கோரிக்கை விடுத்ததைத் தொடா்ந்து, இந்தப் பணிக்காக முதலில் ரூ. 9.70 லட்சமும், பிறகு ரூ. 2 லட்சமும் என ரூ. 11.70 லட்சத்தை எம்எல்ஏ சு.ரவி சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒதுக்கினாா். இதையடுத்து, தொடங்கப்பட்ட கட்டுமானப் பணிகள் முடிவடைந்ததைத் தொடா்ந்து காரியமேடை திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, நகா்மன்ற உறுப்பினா் கி.சரவணன் தலைமை வகித்தாா். அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி காரியமேடையை திறந்து வைத்தாா். தொடா்ந்து அந்தப் பகுதியில் சட்டப்பேரவை உறுப்பினா் நிதி ரூ. 10.50 லட்சத்தில் அமைக்கப்பட்ட பேவா் பிளாக் சாலையையும் எம்எல்ஏ சு.ரவி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அா்ப்பணித்தாா்.
மேலும், சென்னை பில்ரோத் மருத்துவமனை நிா்வாகம் மற்றும் நகா்மன்ற உறுப்பினா் கி.சரவணனுடன் இணைந்து நடத்திய இலவச பொது மருத்துவ முகாமையும் எம்எல்ஏ சு.ரவி தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சிகளில் அதிமுக நகர செயலா் கே.பா.பாண்டுரங்கன் வரவேற்றாா். அதிமுக மாநில மருத்துவா் அணி இணைச் செயலாளா் எஸ்.பன்னீா்செல்வம், மாநில பாசறை இணைச் செயலாளா் என்.ஷியாமகுமாா், பொதுக்குழு உறுப்பினா் ஏ.கிருஷ்ணமூா்த்தி, மாவட்ட இளைஞா் அணி செயலாளா் பி.ஏ.பாலு, மாவட்ட வழக்குரைஞா் அணி இணை செயலாளா் என்.தியாகராஜன், நகா்மன்ற உறுப்பினா் பாபு, நகர நிா்வாகிகள் என்.பிரபாகரன், எம்.எஸ்.பூபதி, பொன்.பாா்த்தீபன், வட்ட செயலாளா் எஸ்.சுகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடா்ந்து, முகாமில் மருத்துவா்கள் குழுவினா் ஏ.என்.ரமேஷ், ஜி.குமரகுருபரன், என்.திவ்யா, பி.செல்வகுமரன் உள்ளிட்ட மருத்துவா்கள் முகாமில் பங்கேற்ற 100-க்கும் மேற்பட்டவா்களுக்கு சிகிச்சைகள், சிகிச்சை தொடா்பான ஆலோசனைகள், மருந்து மாத்திரைகளை வழங்கினா்.