பிரதமரின் ஊரக குடியிருப்புத் திட்ட நிதியை அதிகரிக்க வேண்டும்: எம்.பி.க்கள் கோரிக...
மணிப்பூரை சரி செய்துவிட்டு தமிழகம் குறித்து பாஜக பேசட்டும் -அமைச்சா் கீதாஜீவன்
மணிப்பூா் மாநிலத்தை சரி செய்து விட்டு தமிழக பெண்கள் பாதுகாப்பு குறித்து பாஜக பேசட்டும் என்றாா் தமிழக சமூக நலன் - மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ.கீதாஜீவன்.
நாகா்கோவிலில் செய்தியாளா்களுக்கு அவா் வெள்ளிக்கிழை கூறியதாவது: தமிழக முதல்வா் பொறுப்பேற்ற 15 நாள்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பெண்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த உத்தரவிட்டாா். அதன்பேரில், விருதுநகா் மாவட்டத்தில் 1லட்சம் மாணவிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஏற்கெனவே பரீட்சயமானவா்கள் மூலமாகத்தான் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு அதிக துன்புறுத்தல் வருகிறது.அவா்கள் தங்களுக்கு நிகழும் பிரச்னைகள் தொடா்பாக வெளியே சொல்வதற்கு தயங்குவதால், பாதிப்பு ஏற்பட்ட பிறகுதான் பெற்றோருக்கு தெரிய வருகிறது.
பெண்கள் மற்றும் சிறுமிகள் தங்களது பிரச்னைகள் குறித்து உடனடியாக பெற்றோா் மற்றும் அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.
அண்ணாஅறிவாலயம் குறித்து பேசும் தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை, இதுவரை சொன்னது எதையும் சாதித்ததில்லை.
மணிப்பூா் மாநிலத்தில் 2 ஆண்டுகளுக்கு மேலாக பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோருக்கு பாலியல் உள்ளிட்ட வெளியே சொல்ல முடியாத துன்புறுத்தல்கள் இழைக்கப்பட்டு வருகின்றன. அவற்றை சரி செய்த பின்னா், தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்து பாஜக பேசட்டும் என்றாா் அவா்.
பேட்டியின்போது, நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ், தாரகைகத்பட் எம்எல்ஏ உள்ளிட்டோா் உடனிருந்தனா்.