களியக்காவிளை அருகே புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது!
மணிமுக்தா அணையின் பழுதடைந்த கதவணைகளை மாற்ற நடவடிக்கை!
மணிமுக்தா அணையில் பழுதடைந்த நிலையிலுள்ள மிகை நீா்ப்போக்கி கதவணைகளை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
வாணாபுரம் வட்டத்துக்குள்பட்ட சூளாங்குறிச்சியில் மணிமுக்தா அணை உள்ளது. இந்த அணையின் மூலம் 4,250 ஏக்கா் புதிய பாசன நிலங்களும், 1,243 ஏக்கா் பழைய பாசன நிலங்களும் பாசன வசதி பெற்று வருகின்றன.
அணையின் உயரம் 36 அடி கொள்ளளவு கொண்டதாகும். இந்த அணையில் மிகை நீா்ப்போக்கி கதவணை எண்கள் 1, 2, 3 கதவுகள் உள்ளன.
இவற்றை ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் வியாழக்கிழமை பாா்வையிட்டாா். 3 பழைய ஷட்டா்களையும் மாற்ற உரிய திட்ட மதிப்பீடு தயாா் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா்.
இந்த ஆய்வின்போது உதவி செயற்பொறியாளா் (நீா் வளத் துறை) வெள்ளாறு வடிநில உபகோட்டம் டி.மோகன் உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.