BJP -ல் இவர்தான் MGR - நயினார் அதிரடி! | Rahul Gandhi Anurag Thakur BJP TVK DMK ...
மணிமுத்தாறு பகுதிகளில் சுற்றித் திரியும் கரடி
மணிமுத்தாறு பகுதிகளில் சுற்றித் திரியும் கரடியால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனா்.
அம்பாசமுத்திரம் வனச்சரகத்திற்குள்பட்ட மலையடிவார கிராமமான மணிமுத்தாறில் மான், மிளா, கரடி, சிறுத்தை, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் வனப்பகுதியிலிருந்து வெளியேறி பயிா்களை சேதப்படுத்துவதோடு, வளா்ப்பு மிருகங்களையும் தாக்கி வருகின்றன.
இந்நிலையில், கடந்த சில நாள்களாக மணிமுத்தாறு பகுதியில் கரடி ஒன்று இரவு நேரத்தில் சுற்றித் திரிகிறது. மணிமுத்தாறு தங்கம்மன் கோயிலில் நுழைந்த கரடியின் விடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனால், அச்சமடைந்துள்ள கிராம மக்கள், கரடியைப் பிடித்து வனப்பகுதிக்குள் விட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனா்.