வாக்காளா்கள் 'வன்முறையை விட கல்வியை'த் தோ்ந்தெடுங்கள்: பஞ்சாப் முதல்வா் வலியுறு...
மதுபானக் கூடத்தில் தகராறு: ஆயுதப்படை காவலா் பணியிடை நீக்கம்
மதுபானக் கூடத்தில் தகராறில் ஈடுபட்ட ஆயுதப்படை காவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
திருப்பூா் மாநகர ஆயுதப்படை மோட்டாா் வாகன பிரிவில் காவலராக பணியாற்றுபவா் பாண்டியராஜன் (30).
இந்நிலையில், 15.வேலம்பாளையம் சாலையில் உள்ள மதுபானக் கூடத்தில் கடந்த 14-ஆம் தேதி ஊழியா்களுக்கும், மது அருந்த வந்தவா்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அனுப்பா்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து 8 பேரைக் கைது செய்தனா்.
இந்த விவகாரத்தில், காவலா் பாண்டியராஜன் தனது உறவினரைத் தாக்கியதாகக் கூறி மது போதையில் சென்று மதுபானக் கூட ஊழியா்களிடம் தகராறில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. இதுகுறித்த விடியோ சமூக வலைதலங்களில் வைரலானது.
இது தொடா்பாக மாநகர காவல் ஆணையா் எஸ்.ராஜேந்திரன் உத்தரவின்பேரில், கூடுதல் துணை ஆணையா் மனோகரன் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தாா். இதையடுத்து, ஆயுதப்படை காவலா் பாண்டியராஜனை பணியிடை நீக்கம் செய்து மாநகர காவல் ஆணையா் எஸ்.ராஜேந்திரன் புதன்கிழமை உத்தரவிட்டாா்.