தமிழகத்தில் பாஜக ஓரளவு வெற்றி பெற்றுள்ளது பெரிய துரதிா்ஷ்டம்: ப.சிதம்பரம்
மதுப்புட்டிகளை பதுக்கி விற்ற இருவா் கைது
போடி அருகே சனிக்கிழமை மதுப் புட்டிகளை பதுக்கி விற்பனை செய்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
தேனி மாவட்டம், போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் கிராமப் பகுதிகளில் ரோந்து சென்றனா். அப்போது போடி மீனாட்சிபுரம் கிராமத்தில் சுருளி மகன் விஜய் (29) என்பவரும், மீனாட்சிபுரம் கண்மாய் அருகே துரைராஜபுரம் குடியிருப்பைச் சோ்ந்த பெருமாள் மகன் வீரன் (42) என்பவரும் மதுப்புட்டிகளை பதுக்கி விற்பனை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனா்.