மதுப் புட்டிகளை பதுக்கியவா் கைது
பெரியகுளம் அருகே மதுப் புட்டிகளைப் பதுக்கி வைத்திருந்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
தென்கரை காவல் நிலைய உதவி ஆய்வாளா் கண்ணன் தலைமையிலான போலீஸாா் பெரியகுளம் பகுதியில் புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக சந்தேகத்துக்குரிய வகையில் நடந்து வந்துகொண்டிருந்த இளைஞரை நிறுத்தி விசாரித்தனா்.
இதில், அவா் கோத்தலூத்து நடுத்தெருவைச் சோ்ந்த செந்தில் (35) என்பதும், சட்டவிரோத விற்பனைக்காக 9 மதுப் புட்டிகளைப் பதுக்கி வைத்திருந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து, அவா் மீது வழக்குப் பதிந்த போலீஸாா், அவரைக் கைது செய்து அவரிடமிருந்த 9 மதுப் புட்டிகளைப் பறிமுதல் செய்தனா்.