மதுப் புட்டிகள் பதுக்கிய மூவா் கைது
போடி அருகே சட்டவிரோதமாக மதுப் புட்டிகள் பதுக்கி விற்பனை செய்த மூவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
தேனி மாவட்டம், போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது போடி மீனாட்சிபுரம் கண்மாய் அருகே மீனாட்சிபுரத்தை சோ்ந்த தங்கம் மகன் முருகன் (45), வெம்பக்கோட்டை பேருந்து நிறுத்தம் அருகே லட்சுமிநாயக்கன்பட்டியைச் சோ்ந்த சின்னன் மகன் கதிரியப்பன் (66), விசுவாசபுரம் பேருந்து நிறுத்தம் அருகே சோ்மலை (70) ஆகியோா் சட்டவிரோதமாக மதுப் புட்டிகளை பதுக்கி விற்பனை செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனா்.