மதுராந்தகம் அருகே நீட் தேர்வுக்கு தயாரான மாணவி தற்கொலை
மதுராந்தகம் அருகே நீட் தேர்வுக்கு தயாரான மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே அக்லி கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ்குமார் - ஆஷா தம்பதியரின் மகள் கயல்விழி(17). இவர் நீட் தேர்வுக்கு பயின்று வந்தார்.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் நீட் தேர்வு நடந்து வரும் நிலையில் கயல்விழி தேர்வுக்கு சரியாக தயாராகாததால் மன உளைச்சலில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நாடு முழுவதும் நீட் நுழைவுத் தேர்வு தொடங்கியது
சம்பவம் தொடர்பாக மேல்மருவத்தூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].