ஆம்பூரில் உழவா் சந்தை அமைக்கப்படுமா? பொதுமக்கள், விவசாயிகள் காத்திருப்பு!
மதுரையில் கடத்தப்பட்ட தொழிலதிபர்; நாக்பூர் வரை ஃபாலோ செய்த போலீஸ்; இரு வாரத்திற்குப் பின் மீட்பு
கடந்த 6-ஆம் தேதியன்று கடத்தப்பட்ட பிரபல தொழிலதிபர் சுந்தரராமன் மதுரை காவல்துறையினரால் நேற்று மீட்கப்பட்டார். இந்த கடத்தலில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

மதுரை பீ.பி. குளம் அருகே நாராயணபுரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் சுந்தரராமன். இவருக்கு மதுரை, தென்காசி, திண்டுக்கல் எனப் பல்வேறு பகுதிகளில் சொத்துக்கள் உள்ளன.
சுந்தரராமனின் பெயரில் திண்டுக்கல்லில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களைத் திண்டுக்கல்லைச் சேர்ந்த மரியராஜ் என்பவர் ஆக்கிரமிக்க முயன்ற நிலையில் அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் சுந்தரராமன் வழக்கு தொடர்ந்தார்.
சுந்தரராமனுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வந்துவிடும் என்று அறிந்துகொண்ட மரியராஜ், சொத்துக்களை மிரட்டி அபகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தன் நண்பர்கள் தென்காசி ரமேஷ், காரைக்குடி ராமச்சந்திரன் என்ற அழகுசுந்தரம், மயிலாடுதுறை கிரிவாசன் ஆகியோருடன் கடந்த 6 ஆம் தேதி மதுரை வந்துள்ளார்.
அதைத்தொடந்து, பீபி குளம் வீட்டிலிருந்த சுந்தரராமனிடம் பேச்சுவார்த்தை நடத்த வந்தது போல வந்து காரில் கடத்தி சென்றுள்ளனர்.
அதோடு அங்கிருந்த சிசிடிவி கேமிராக்களின் ஹார்ட் டிஸ்க்குகளை எடுத்து சென்றுள்ளனர்.
உடனே சுந்தரராமனின் உறவினர் பெரியகருப்பன் மதுரை தல்லாகுளம் காவல்நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடிவந்தனர்.
சுந்தரராமனை காரில் கடத்தி சென்ற கும்பல் காரைக்குடிக்குச் சென்று, அங்கிருந்து வேறொரு காரில் மயிலாடுதுறைக்குச் சென்று ஜெனமேந்திரன் என்பவரின் காரில் அங்கிருந்து கிளம்பினர்.

விசாரனையைத் தொடங்கிய காவல்துறையினர் இக்கடத்தலுக்கு முக்கிய காரணமான திண்டுக்கல் மரியராஜ், மயிலாடுதுறை அருள்செல்வன், முத்துக்கிருஷ்ணன், விக்னேஷ் நாகப்பட்டினம் ஜெனமேந்திரன், தென்காசி அருள் ஆகிய 6 பேரை 16 ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஆனால், சுந்தரராமனைக் கண்டுபிடிப்பதில் காவல்துறைக்குத் தாமதாகிக் கொண்டே வந்தது. இதனிடையே கடத்தல் கும்பல் அவரை ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா என காரில் அழைத்து சென்று கொண்டிருந்தது.
அவர்களைத் தனிப்படையினர் பின்தொடர்ந்து சென்றபோது கடத்தல் கும்பல், நாக்பூரிலிருந்து மீண்டும் தமிழகத்திற்குத் திரும்பி வரத் தொடங்கினர்.
தருமபுரி, சேலம் திருச்சி வழியாக மதுரை நோக்கி வந்த கடத்தல்காரர்களைப் பின்தொடர்ந்து வந்த தனிப்படையினர் மதுரை பாண்டி கோயில் அருகே சுற்றி வளைத்து பிடித்தனர்.

அப்போது இறங்கி ஓட முயன்ற சிவகங்கை ராமச்சந்திரன் என்ற அழகு, மயிலாடுதுறையைச் கிரிவாசன் ஆகியோருக்குக் காலில் காயம் ஏற்பட்ட நிலையில் இருவரையும் கைது செய்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
மேலும் இந்த கடத்தல் வழக்கில் தலைமறைவாக உள்ள இன்னும் சிலரையும் காவல்துறையினர் தேடிவருகின்றனர்
தொழிலதிபர் சுந்தரராமன் கடத்தப்பட்ட சப்பவத்தில் ஆரம்பத்தில் காவல்துறை சுணக்கமாகச் செயல்பட்டதாக கூறப்படுகிறது.
நீதிமன்றத்தில் மனுச்செய்தும், மதுரையில் தொழில்துறையில் முக்கிய நபராக உள்ள சுந்தரராமனின் உறவினரும், கனடாவிலுள்ள அவருடைய சகோதரியும் தமிழக முதலமைச்சர் வரைக்கும் பிரச்சனையே கொண்டு சென்று வலியுறுத்திய பின்பே மதுரை காவல்துறையினர் துரிதமாகச் செயல்பட்டு சுந்தரராமன் மீட்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
இந்த கடத்தல் சம்பவத்தின் பின்னணியில் வேறு முக்கிய புள்ளிகள் யாரும் சம்பந்தப்பட்டுள்ளார்களா என்றும் காவல்துறை விசாரித்து வருகிறார்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb