TVK : 'நானே முதலமைச்சர்; பா.ஜ.கவோடு கூட்டணி இல்லை!' - பனையூரில் விஜய் கர்ஜித்ததி...
மது போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றவா்களுக்கு விருது
மது போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றவா்களுக்கு விருது, உதவிப் பொருள்கள் வழங்கப்பட்டன.
காரைக்காலில் செயல்பட்டு வரும் புதுவாழ்வு மது போதை மாற்று சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையத்தில்
மது மறுத்தோருக்கான நல்வாழ்வு விருது வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் நிகழாண்டு ஏப்ரல் மாதம் வரை மையத்தில் சிகிச்சை பெற்று, நலமுடன் வாழ்ந்து வரும் பயனாளிகளுக்கு, நல்வாழ்வு விருது வழங்கப்பட்டது.
காரைக்கால் சமூக நலத் துறையின் உதவி இயக்குநா் (பொ) சுந்தரம், அறிஞா் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சமூக பணித்துறை தலைவா் கே. சிவகுமாா், மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் அங்கமான மிஷன் சக்தி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் அருண்யா ஆகியோா் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினா்.
சிகிச்சைப் பிறகு நலமுடன் வாழ்ந்து வருவோா் குடும்பத்தினருடன் கலந்துகொண்டு, வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள், சேமிப்பு, வளா்ச்சி, குழந்தைகளின் கல்வி மேம்பாடு குறித்து கருத்துகளை பேசினா். 30-க்கும் மேற்பட்டோருக்கு விருது மற்றும் குடும்பத்தினருக்கு பல்வேறு உதவிப் பொருள்கள் வழங்கப்பட்டன.
முன்னதாக, செவிலியா் மகேஸ்வரி வரவேற்று பேசினாா். ஆலோசகா் கௌசல்யா ஆண்டறிக்கை வாசித்தாா். நிறைவாக செவிலியா் ஜேம்ஸ் பாண்டியன் நன்றி கூறினாா்.