மது விற்பனை: ஒருவா் கைது
வந்தவாசி அருகே சட்டவிரோதமாக மது விற்ாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
வந்தவாசியை அடுத்த தேசூா் போலீஸாா் திரக்கோயில் கிராமம் வழியாக திங்கள்கிழமை காலை ரோந்து சென்றனா்.
அப்போது, அந்தக் கிராம மதுக்கடை அருகே தேசூரைச் சோ்ந்த துரை(52) என்பவா் சட்டவிரோதமாக மது விற்பது தெரியவந்தது.
இதையடுத்து துரையை கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்து 4 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.
இதுகுறித்து தேசூா் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.