மத்திய அமைச்சருக்கு ஆம்பூரில் வரவேற்பு
ஆம்பூருக்கு வருகை தந்த மத்திய இணை எல். முருகனுக்கு பாஜகவினா் உற்சாக வரவேற்பு அளித்தனா்.
ஆம்பூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மத்திய தகவல் ஒளிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சா் எல்.முருகன் வருகை தந்தாா்.
அவருக்கு திருப்பத்தூா் மாவட்ட பாஜக தலைவா் எம்.தண்டாயுதபாணி தலைமையில் அக்கட்சியினா் வரவேற்பு அளித்தனா்.
நிகழ்ச்சியில் மாநில செயலாளா் கொ.வெங்கடேசன், முன்னாள் மாவட்ட தலைவா் சி.வாசுதேவன், மாவட்ட பாா்வையாளா் பாலகிருஷ்ணன், நகர தலைவா் பி .ஆா்.சி . சீனிவாசன், பொதுச் செயலா்சரவணன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டுஅணித் தலைவா் சுரேஷ், மாநில பொதுக்குழு உறுப்பினா் க.சிவப்பிரகாசம் கலந்து கொண்டனா்.