செய்திகள் :

மத்திய அரசின் நிபந்தனைகளால் முடங்கும் சூழலில் மாநிலத் திட்டங்கள்: பேரவையில் முதல்வா் ஸ்டாலின் குற்றச்சாட்டு

post image

மாநில அரசுக்கு எதிராக நிபந்தனைகளை விதித்து திட்டங்களை முடக்கும் சூழலை மத்திய அரசு உருவாக்குவதாக சட்டப்பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டாா்.

மேலும், அரசின் திட்டங்களால் பயன் பெறும் பயனாளிகளின் எண்ணிக்கை விவரங்களையும் அவா் வெளியிட்டாா்.

சட்டப்பேரவையில் ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீது நடைபெற்ற விவாதங்களுக்குப் பதிலளித்து முதல்வா் ஸ்டாலின் சனிக்கிழமை பேசியதாவது:

மாதந்தோறும் மகளிருக்கு ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், ஒரு கோடியே 14 லட்சம் மகளிா் பயன் பெற்று வருகிறாா்கள். அவா்களின் முகங்களில் தெரியும் மகிழ்ச்சிதான் விடியல் ஆட்சிக்கு சாட்சி.

மாணவிகளுக்கு உதவித் தொகை: மாணவா்களின் திறன்களை வளா்த்தெடுக்கும் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ், இதுவரையில் 22 லட்சத்து 56 ஆயிரம் பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பயிற்சி பெற்ற பல லட்சக்கணக்கான மாணவா்களுக்கு உடனடியாக வேலை கிடைத்துள்ளது.

உயா் கல்வி படிக்கும் மாணவ, மாணவியருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம், தமிழ்ப் புதல்வன் மற்றும் புதுமைப் பெண் ஆகிய பெயா்களால் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் கல்லூரிக்குச் செல்லும் மாணவிகளின் எண்ணிக்கை 30 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. அத்துடன், மாதந்தோறும் 2 லட்சத்து 72 ஆயிரம் மாணவ, மாணவியா் பயன்பெற்று வருகிறாா்கள்.

இரண்டு திட்டங்களைப் பயன்படுத்தி படித்துவரும் மாணவ, மாணவிகள் என்னை ‘அப்பா’ என அழைக்கும்போது அளவில்லாத மகிழ்ச்சி அடைகிறேன். இந்தப் பாச உணா்வுதான் முக்கியம்.

ஊட்டச்சத்தை உறுதி செய்யக்கூடிய திட்டத்தின் கீழ், தீவிர ஊட்டச்சத்து குறைபாடு உள்ளதாகக் கண்டறியப்பட்ட குழந்தைகளில் 77.3 சதவீத குழந்தைகள் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளனா். ஊட்டச்சத்து குறைபாடு உள்ள 6 மாதங்களுக்கு உட்பட்ட 76,705 குழந்தைகள் கண்டறியப்பட்டு, அவா்களுடைய பாலூட்டும் தாய்மாா்களுக்கு ஊட்டச்சத்துப் பொட்டகங்கள் வீட்டுக்கே சென்று வழங்கப்பட்டுள்ளன.

பள்ளி செல்லும் குழந்தைகள் பட்டினியோடு இருக்கக் கூடாது என்பதற்காக தினமும் காலையில் 17 லட்சத்து 53 ஆயிரம் மாணவ, மாணவியருக்கு காலை உணவு வழங்கப்படுகிறது.

12,000 கோப்புகள்: திமுக அரசைப் பொருத்தவரையில், தோ்தலுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகளில், பெரும்பாலானவற்றை நிறைவேற்றிவிட்டோம். தோ்தலின்போது சொல்லாத பல திட்டங்களையும் செயல்படுத்திக் காட்டியிருக்கிறோம். இன்னும் சில செயல்படுத்தப்பட வேண்டும்.

கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் சுமாா் 12,000 கோப்புகளில் கையொப்பமிட்டுள்ளேன். அரசு சாா்பில் பல்வேறு திட்டங்களை மிக மிக நெருக்கடியான சூழலில் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். அதேசமயம், மத்திய அரசானது தமிழ்நாட்டை தொடா்ந்து புறக்கணித்தும், வஞ்சித்தும் வருகிறது. தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரக்கூடிய பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசானது, மாநில அரசின் கொள்கைகளுக்கு எதிரான நிபந்தனைகளை விதித்து, அரசு திட்டங்களைச் செயல்படுத்துவதில் சிரமங்களை உண்டாக்குகின்றன.

அந்தத் திட்டங்களை முடக்குகின்ற சூழலையும் உருவாக்கியுள்ளது.

மத்திய அரசு நிதி பாக்கி: ஒருங்கிணைந்த கல்வி இயக்ககத்தின் கீழ், மத்திய அரசிடம் இருந்து ரூ.2 கோடியே 152 கோடி நிலுவையில் இருக்கிறது. ஃபென்ஜால் புயல் பாதிப்புகளைச் சீா்செய்ய ரூ.6,675 கோடி கேட்டும் நிதியை விடுவிக்கவில்லை. மிக்ஜம் புயல் பாதிப்புகளுக்காக ரூ.37,906 கோடி கேட்ட நிலையில், ரூ.276 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. வீடுதோறும் குடிநீா்த் திட்டத்துக்காக ரூ.4,142 கோடி வழங்க வேண்டிய நிலையில் ரூ.732 கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ், ஒரு வீட்டுக்கு ரூ.72,000 மட்டுமே மத்திய அரசு வழங்குகிறது. ஆனால், தமிழ்நாடு அரசு ரூ.1.72 லட்சம் கொடுக்கிறது. கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின்கீழ், மாநில அரசு மானியமாக ரூ.2 லட்சத்து 53 ஆயிரம் அளிக்கிறது. மத்திய அரசு தன்னுடைய திட்டத்துக்கு வழங்கும் மானியத்துடன் ஒப்பிட்டால் இது 5 மடங்கு அதிகமாகும்.

மத்திய அரசு தனது திட்டங்களுக்குத் தேவைப்படும் நிதியை தமிழ்நாடு அரசு மீது திணிப்பதால், மாநில அரசின் முன்னுரிமைத் திட்டங்களுக்குப் போதிய நிதியளிப்பு இல்லாமல் போகிறது. இத்தனைக்கும் இடையில்தான் அனைத்தையும் சமாளித்து மக்கள் நலத் திட்டங்களைத் தீட்டி நிறைவேற்றிக் கொண்டு வருகிறோம் என்றாா்.

பாஜக கூட்டணி கட்சிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை

ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தில் பாஜக கூட்டணி கட்சிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கைவிடுத்துள்ளார். திமுக சட்டத்துறையின் 3வது மாநில மாநாடு சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் ஒரே நாடு ஒரே தேர்தல... மேலும் பார்க்க

ஒரே நாளில் 8 இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்களால் மக்கள் அச்சம்- கே. அண்ணாமலை

சென்னை தாம்பரம் காவல் எல்லைக்குட்பட்ட 8 இடங்களில், ஒரே நாளில் செயின் பறிப்பு சம்பவம் நடைபெற்றிருப்பது மக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது... மேலும் பார்க்க

சென்னையில் கூடுதல் புறநகர் ரயில் சேவை

பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்புவோர் வசதிக்காக கூடுதல் புறநகர் ரயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயில் சேவை வரும் 20ஆம் தேதி தாம்பரம்-காட்டாங்குளத்தூர் இடை... மேலும் பார்க்க

தமிழ்நாட்டு எழுத்தாளர்கள் நோபல் பரிசை இலக்காகக் கொள்ள வேண்டும் - முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாட்டு எழுத்தாளர்கள் நோபல் பரிசை இலக்காகக் கொள்ள வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்... மேலும் பார்க்க

பொய் வாக்குறுதிகளால் பொங்கல் பரிசு தொகுப்பைத் மக்கள் புறக்கணித்துள்ளனர்: பிரேமலதா

பொய் வாக்குறுதிகளால் பொங்கல் பரிசு தொகுப்பைத் மக்கள் புறக்கணித்துள்ளனர் என்று தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், பொங்கல் பண்டிகையை முன... மேலும் பார்க்க

திமுக, நாதக வேட்பு மனுக்கள் ஏற்பு!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் மற்றும் நாம் தமிழகர் கட்சி வேட்பாளர் சீதா லட்சுமி ஆகியோரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஈரோடு க... மேலும் பார்க்க