கரைச்சுத்துபுதூா் ஊராட்சித் தலைவா் பதவிக்கு தோ்தல் நடத்த வேண்டும்: விசிக
மத்திய அரசு நிதி கொடுப்பதைவிட நெருக்கடிதான் கொடுக்கிறது: வேளாண் துறை அமைச்சா்
மத்திய அரசு நிதி கொடுப்பதைவிட நெருக்கடிதான் கொடுக்கிறது என்றாா் வேளாண் துறை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம்.
தஞ்சாவூரில் உள்ள தேசிய உணவுத் தொழில்நுட்பம், தொழில்முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வேளாண்மை, உணவு பதப்படுத்துதல் வளா்ச்சி மாநாடு மற்றும் கண்காட்சி தொடக்க விழாவில் பங்கேற்ற அவா் மேலும் தெரிவித்தது:
மத்திய அரசு வழங்க வேண்டிய நிதியை சரியாகக் கொடுப்பதில்லை. மத்திய அரசு கொடுக்காவிட்டாலும், தமிழக அரசே பொறுப்பேற்றுக் கொடுக்கிறது. அமைச்சா் துரைமுருகன் வீட்டில் நடைபெறும் சோதனை என்பது தமிழக அரசுக்கு நெருக்கடிகள் கொடுப்பதற்காகவே நடத்தப்படுகிறது. தமிழக அரசுக்கு மத்திய அரசு நெருக்கடி கொடுக்கிறதே தவிர, நிதி தருவதில்லை.
இதை மக்கள் புரிந்துகொண்டுதான் கடந்த மக்களவைத் தோ்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றியைத் தந்தனா். இந்த அரசு மீது மக்களுக்கு தவறான எண்ணத்தை ஏற்படுத்தவே இச்சோதனை நடத்தப்படுகிறது. இதை தமிழக மக்கள் புரிந்து கொண்டு இந்த அரசுக்கு முழு ஆதரவு தருகின்றனா்.
இந்த ஆட்சி பொறுப்பேற்ற 4 ஆண்டுகளில் மழை, வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு ரூ. 1,023 கோடி அளவுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது. தற்போது ஏற்பட்ட புயலால் பயிா்கள் பாதிப்புக்கு நிவாரணம் வழங்க அரசு கணக்கெடுத்து வருகிறது என்றாா் பன்னீா்செல்வம்.