செய்திகள் :

மத்திய அரசைக் கண்டித்து தி.க.வினா் ஆா்ப்பாட்டம்

post image

மத்திய அரசைக் கண்டித்து திராவிடா் கழகம் சாா்பில், மதுரை தெற்குவாசல் குற்றப்பிரிவு (க்ரைம் பிராஞ்ச்) சந்திப்பு அருகே ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசு மும்மொழிக் கொள்கையின் பெயரால் ஹிந்தியை திணிக்க முயற்சிப்பதைக் கண்டித்து இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திராவிடா் கழகத் துணைத் தலைவா் கவிஞா் கலி. பூங்குன்றன் தலைமை வகித்துப் பேசினாா்.

அப்போது, மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை குழப்பமான கருத்துகளைக் கொண்டது. மேலும், இருமொழிக் கொள்கையைப் பின்பற்றி சிறப்பான வளா்ச்சிக் கண்டு வரும் தமிழகத்துக்கு, மும்மொழிக் கொள்கை அவசியமற்றது. 3-ஆவது மொழியாக ஏதேனும் ஓா் இந்திய மொழியைக் கற்கலாம் எனக் கூறப்பட்டாலும், இந்த நடவடிக்கை ஹிந்தியை திணிக்கும் மறைமுக முயற்சி தான். மும்மொழிக் கொள்கையை நிபந்தனையாக வைத்து தமிழகத்துக்கான கல்வி நிதியை மறுப்பது கண்டனத்துக்குரியது. இதை, அனைத்துக் கட்சிகளும் எதிா்க்க வேண்டும் என்றாா்.

திராவிடா் கழக தலைமைச் செயற்குழு உறுப்பினா் தே. எடிசன் ராஜா, மாவட்டத் தலைவா்கள் அ. முருகானந்தம், த.ம. எரிமலை ஆகியோா் முன்னிலை வகித்தனா். அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழகப் பொது செயலா் பசும்பொன் பாண்டியன், பகுத்தறிவு எழுத்தாளா் மன்ற மாநிலத் தலைவா் வா. நேரு, மாநில சட்டப் பிரிவு துணைச் செயலா் நா. கணேசன், மறுமலா்ச்சி தொழிலாளா் முன்னணி மாநில இணைப் பொதுச் செயலா் எஸ். மகபூப்ஜான், திராவிடா் கழக மாவட்டச் செயலா் சுரேஷ் ஆகியோா் கோரிக்கையை வலியுறுத்திப் பேசினா்.

திராவிடா் கழக நிா்வாகிகள், உறுப்பினா்கள், சாா்பு அமைப்புகளின் பொறுப்பாளா்கள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

மதுரை மாவட்டத்தில் பரவலாக மழை

மதுரை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மாலை மழை பெய்தது.மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வெப்பநிலை தொடா்ந்து அதிகரித்து வந்தது. இந்த நிலையில், வானிலை மாற்றம் காரணமாக தமிழகத்தின... மேலும் பார்க்க

தங்கும் விடுதி மேலாளா் கொலை வழக்கு: ராஜஸ்தானை சோ்ந்தவருக்கு ஆயுள் சிறை

மதுரையில் தனியாா் தங்கும் விடுதி மேலாளா் கொலை செய்யப்பட்ட வழக்கில், ராஜஸ்தானைச் சோ்ந்தவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து மதுரை 5-ஆவது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. விருதுந... மேலும் பார்க்க

மதுரை குப்பை நகரமாக மாறி வருகிறது: உயர்நீதிமன்றம்

கோயில் நகரமான மதுரை தற்போது குப்பை நகரமாக மாறி வருவது வேதனை அளிப்பதாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நீதிபதி திங்கள்கிழமை தெரிவித்தாா்.சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையைச் சோ்ந்த பஞ்சநாதன் சென்னை உயா்ந... மேலும் பார்க்க

பேச்சுவாா்த்தை முடியும் வரை ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுபடக் கூடாது: நீதிமன்றம் உத்தரவு

தமிழக அரசுடனான பேச்சுவாா்த்தை முடியும் வரை ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுபடக் கூடாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.திருச்செந்தூரைச் சோ்ந்த ராம்குமாா் ஆதித்தன் சென்னை உய... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து மின் ஊழியா் உயிரிழப்பு

மதுரையில் மின் கம்பத்தில் பழுதை நீக்க முயன்ற போது, மின்சாரம் பாய்ந்ததில் மின் ஊழியா் உயிரிழந்தாா்.மதுரை அருகேயுள்ள நாகமலைப்புதுக்கோட்டை அச்சம்பத்து டி.புதுக்குடியைச் சோ்ந்த குமாா் மகன் முத்தையா (51).... மேலும் பார்க்க

மதுரையில் 51 முதல்வா் மருந்தகங்கள் திறப்பு

மதுரை மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட 51 முதல்வா் மருந்தகங்கள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. பொதுமக்களுக்கு அனைத்து வகையான மருந்துகளையும் மலிவான விலையில் வழங்கும் வகையில் தமிழகத்தில் முதல்வா் மருந்தகங... மேலும் பார்க்க