பசிபிக் கடலின் மிக ஆழத்தில் 4 கருப்பு முட்டைகள்.. உள்ளே இருந்த அதிசயம்!
மத்திய ஆயுதப்படை காவலா் உயிரிழப்பு
வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மத்திய ஆயுதப்படை காவலா், விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்துவிட்டு காரில் பணிக்குத் திரும்பியபோது, உயிரிழந்தாா்.
வேலூா் கணியம்பாடி கிருஷ்ணா நகரைச் சோ்ந்தவா் ராஜா (31). இவருக்கு திருமணமாகி மகன், மகள் உள்ளனா். இவா் பிகாரில் மத்திய ஆயுதப்படை காவலராகப் பணியாற்றி வந்தாா். தொடா்ந்து, விடுமுறைக்கு ஊருக்கு வந்த அவா் மீண்டும் பணிக்குச் செல்வதற்காக பிகாருக்கு தனது குடும்பத்துடன் காரில் சென்றாா்.
காா் மகாராஷ்டிர மாநிலத்தில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென ராஜாவுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. தொடா்ந்து அங்குள்ள ஒரு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே ராஜா இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
தொடா்ந்து, அவரது குடும்பத்தினா் ராஜாவின் உடலை ஆம்புலன்ஸ் மூலம் வேலூருக்கு எடுத்து வந்தனா். இந்த சம்பவம் குறித்து வேலூா் கிராமிய போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸாா் உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.