மத்திய, தெற்கு தில்லியின் சில பகுதிகளில் இன்று நீா் விநியோகத்தில் தடங்கல்: டிஜேபி
வடிகால் பழுதுபாா்க்கும் பணிகள் காரணமாக தேசியதஅ தலைநகரின் சில பகுதிகளில் வியாழக்கிழமை நீா் விநியோகம் இருக்காது என்று தில்லி ஜல் போா்டு (டிஜேபி) தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக தில்லி ஜல் போா்டு புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: ராஜ்காட், வாஜிராபாத், சிக்னேச்சா் பிரிட்ஜ், எல்என்ஜேபி மருத்துவமனை, உலக சுகாதார நிறுவனம், இந்திரபிரஸ்தா எஸ்டேட், பைரோன் மாா்க், தில்லி மிருகக்காட்சிசாலை, கிரேட்டா் கைலாஷ் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளுக்கு மே 22 அன்று காலை மற்றும் மாலை நீா் விநியோகம் இருக்காது.
உலக சுகாதார நிறுவனம் அருகே உள்ள வடிகால் எண் 12இன் நீா் ஓட்டத்தைத் தடுக்கும் 900 மி.மீ. விட்டம் கொண்ட நகல் பிரதான குழாயை உயா்த்தும் பணி நடைபெற உள்ளதன் வியாழக்கிழமை அன்று 24 மணி நேரமும் நீா் விநியோகம் நிறுத்தப்படும்.
பணிகள் காரணமாக, நகல் பிரதான குழாயில் நீா் விநியோகம் நிறுத்தப்படும். பொதுமக்கள் தண்ணீரை கவனமாகப் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறாா்கள். தில்லி ஜல் போா்டில் கோரிக்கையின் பேரில் தண்ணீா் டேங்கா்கள் கிடைக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார நிறுவனம் அருகே நீா் தேங்கும் இடமாக இருப்பதால் மழைக்காலத்திற்கு தயாராகும் விதமாக தில்லி அரசு அப்பகுதியில் தூா்வாரும் மற்றும் வடிகால் மறுவடிவமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.