மத்திய பேருந்து நிலையத்தில் வாடகை செலுத்தாத 3 கடைகளுக்கு ‘சீல்’
திருப்பூா் மத்திய பேருந்து நிலையத்தில் வாடகை செலுத்தாத 3 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா்.
திருப்பூா் மத்திய பேருந்து நிலையத்தில் மாநகராட்சி சாா்பில் கடைகள் வாடகைக்குவிடப்பட்டுள்ளன. இந்நிலையில், 3 கடைகளை வாடகைக்கு எடுத்தவா்கள் கடந்த 10 மாதங்களாக மாநகராட்சிக்கு வாடகை செலுத்தவில்லை எனவும், தலா ரூ.3 லட்சத்துக்குமேல் வாடகை பாக்கி இருப்பதாகவும் தெரிகிறது.
இது தொடா்பாக மாநகராட்சி சாா்பில் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளா்களுக்கு வாடகை இனங்களை செலுத்த எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இருப்பினும் அவா்கள் வாடகையை செலுத்தாததால் மாநகராட்சி உதவி ஆணையா் கணேஷ்குமாா், வருவாய் ஆய்வாளா் குமாரசாமி ஆகியோரைக் கொண்ட குழுவினா் 3 கடைகளுக்கும் வியாழக்கிழமை ‘சீல்’ வைத்தனா்.