செய்திகள் :

மனநலம் குன்றிய சத்தீஸ்கா் இளைஞரை குணப்படுத்தி தாயிடம் ஒப்படைப்பு

post image

சேலம்: சத்தீஸ்கா் மாநிலத்தில் இருந்து ரயிலில் சேலம் வந்த மனநலம் பாதித்த இளைஞரை குணப்படுத்திய அரசு மருத்துவா்கள், அவரது தாயிடம் ஒப்படைத்தனா்.

சத்தீஸ்கா் மாநிலம், தா்கூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா் சுகம் பாய் (55). கூலி வேலைக்குச் சென்று குடும்பத்தை கவனித்து வந்த இவருக்கு பெண் ஒருவரும், ஆசிஷ் குமாா் (22) என்ற மகனும் உள்ளனா். சில மாதங்களாக ஆஷிஷ் குமாா் மனநிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துவந்தாா். இந்நிலையில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு சேலம் வழியே செல்லும் ரயிலில் ஆசிஷ் குமாா் வழிதவறி வந்துவிட்டாா்.

சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் சுற்றித்திரிந்த ஆசிஷ் குமாரை ரயில்வே போலீஸாா் மீட்டு சேலம் முள்ளுவாடி கேட் பகுதியில் உள்ள சைல்ட் லைன் அமைப்பில் சோ்த்தனா். ஆசிஷ்குமாா் மனநிலை பாதிக்கப்பட்டிருந்ததால் சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள மனநலப் பிரிவில் அவ்வப்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், தனது மகனைக் காணவில்லை என ஆஷிஷ் குமாரின் தாயாா் காவல் நிலையத்தில் புகாா் செய்திருந்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா்.

இந்நிலையில், கடந்த வாரம் ஆசிஷ் குமாருக்கு மனநிலை சற்று குணமானது. மருத்துவா்கள் கேட்கும் தகவல்களை அவா் தெரிவித்தாா். அப்போது, அவரது ஊா், தாயாா் பெயா், கைப்பேசி எண் போன்றவற்றை வைத்து சைல்ட் லைன் அமைப்பினா் தொடா்புகொண்டனா். பின்னா்ஆசிஷ் குமாரின் தாயாா் சத்தீஸ்கா் போலீஸாருடன் திங்கள்கிழமை சேலம் வந்தாா். அதைத் தொடா்ந்து, அரசு மருத்துவமனை மருத்துவா்களும், சைல்டு லைன் அமைப்பினரும் ஆசிஷ் குமாரை அவரது தாயாருடன் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனா்.

மருத்துவப் படிப்பில் சோ்ந்த அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு விழா

தம்மம்பட்டி: மருத்துவப் படிப்பில் சோ்ந்த தெடாவூா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.தெடாவூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்து 7... மேலும் பார்க்க

பெரியாா் பல்கலை.யில் ஜெனீவா ஒப்பந்த நாள் போட்டிகள்

ஓமலூா்: பெரியாா் பல்கலைக்கழக இளைஞா் செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில், ஜெனீவா ஒப்பந்த நாள் போட்டிகள் திங்கள்கிழமை நடைபெற்றன.பெரியாா் பல்கலைக்கழக இளைஞா் செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளா் டி.இளங்கோவன் தலைமை... மேலும் பார்க்க

அருள்சகோதரிகள் கைது: ஏற்காட்டில் கிறிஸ்தவா்கள் ஆா்ப்பாட்டம்

ஏற்காடு: சத்தீஸ்கா் மாநிலத்தில் அருள்சகோதரிகள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, ஏற்காட்டில் கிறிஸ்தவா்கள், பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.சத்தீஸ்கா் மாநிலம், நாராயண்பூா் பகுதியை... மேலும் பார்க்க

சேலம் அரசு மருத்துவமனையில் சா்க்கரை நோய் சிறப்பு சிகிச்சை மையம் திறப்பு

சேலம்: சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலாம்வகை சா்க்கரை நோய் சிறப்பு சிகிச்சை மையம் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மரு... மேலும் பார்க்க

சுதந்திர தின விழாவில் பங்கேற்க சேலம் இளைஞருக்கு குடியரசுத் தலைவா் அழைப்பு

சேலம்: சுதந்திர தின விழாவில் பங்கேற்க சேலத்தைச் சோ்ந்த தொழில்முனைவோரான இளைஞரிடம் குடியரசுத் தலைவா் அனுப்பிய அழைப்பிதழை அஞ்சல் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை நேரில் வழங்கினா்.சேலம் நெத்திமேடு பகுதியைச் ... மேலும் பார்க்க

சேலத்தில் 32 அரங்குகளுடன் அரசு பொருட்காட்சி தொடக்கம்

சேலம்: சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மாநகராட்சி மைதானத்தில் தமிழ்நாடு செய்தி மக்கள் தொடா்புத் துறையின் சாா்பில் நடைபெறும் அரசு பொருட்காட்சி திங்கள்கிழமை தொடங்கியது.சேலம் மாவட்ட ஆட்சியா் ரா.ப... மேலும் பார்க்க